உணவு பொருட்களை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விகி தனது ஊழியர்களில் 1100 பேரை ஆட்குறைப்பு செய்வதாக அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தஉலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து நாடுகளிலும் தொழில் நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகுதொழில் துறையை முடுக்கிவிடுவது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் தொழில்துறை பாதிப்பால் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் வேலையிழக்கும் சூழல் உள்ளது.
இந்தநிலையில் உணவு பொருட்களை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் நிறுவனமான
ஸ்விகி தனது ஊழியர்களில் 1100 பேரை ஆட்குறைப்பு செய்வதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்விகி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஸ்ரீஹர்ஷா கூறுகையில் “துரதிஷ்டவசமாக அனைத்து மட்டங்களிலும் நாங்கள் எங்களது ஊழியர்களில் 1100 பேரை பிரிய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. நகரங்களிலும், தலைமை அலுவலகத்திலும் ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுகின்றனர். எங்கள் நிர்வாகத்தில்ஆலோசித்து எடுக்கப்பட்ட கடினமான முடிவு” என்று தெரிவித்துள்ளார்.
எனினும், இதனால் பாதிக்கப்படும் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தது மூன்று மாதத்திற்கு சம்பளம் வழங்கப்படும் என்று ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
வணிகம்
4 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago