தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே பிரதமர் மோடியின் திட்டம்: நிர்மலா சீதாராமன்

By செய்திப்பிரிவு

தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே பிரதமர் மோடி அறிவித்துள்ள திட்டத்தின் நோக்கம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஊரடங்கு தொடர்பாகவும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். ஏறக்குறைய 6 மணிநேரத்துக்கும் மேலாக இந்த ஆலோசனை நடந்தது. இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான முதல்வர்கள் ஊரடங்கை தளர்த்தும் முடிவு குறித்து வெவ்வேறு கருத்துக்களை மாநில அரசுகள் முன் வைத்தன. சில மாநில அரசுகள் ஊரடங்கு தொடர வேண்டும் எனவும், சில தளர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தன.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றினார். அவர் பேசுகையில் ‘‘ கரோனா பாதி்ப்பால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொருளாதார மீட்புக்காக 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிட்டில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் கரோனா மீட்பு பணிகளுக்கு செலவிடப்படும். பொருளாதார மீட்பு பணியில் உள்கட்டமைப்பு பணிகள் மிக முக்கியம். உலக நாடுகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கவதில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும்.’’ எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பிரதமரின் அறிவிப்பு பற்றிய விரிவான பொருளாதார திட்டங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி அவர் செய்தியாளர்களிடம் பொருளாதார திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘விரிவான தொலை நோக்கு திட்டத்தை பிரதமர் மோடி நேற்று அறிவித்திருக்கிறார். சுயசார்பு என்ற நோக்கில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இந்தியா தற்சார்பு நிலையை எட்டுவதற்கான நோக்கத்துடன் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். பல்வேறு தரப்பினரும் கலந்து ஆலோசித்து சிறப்பு பொருளாதார தொகுப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியை ஏற்படுத்தவும் தன்னிறைவு உருவாக்கவும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பொருளாதார கட்டமைப்பு, தொழில்நுட்பம் போன்ற 5 தூண்களை உருவாக்குவோம்.’’ எனக் கூறினார்.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்