விவசாயிகள் விளைவித்தப் பொருட்களை ஆன்லைன் மூலமே விற்பனை செய்வதற்காக 177 விற்பனைக் கூடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் விவசாயப் பொருட்களை சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதில் சிக்கல் இருந்து வருகிறது. இதையடுத்து விவசாயிகள் விளைவித்தப் பொருட்களை ஆன்லைன் மூலமே விற்பனை செய்வதற்காக 177 விற்பனைக் கூடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று இதனை தொடங்கி வைத்தார். இந்த விற்பனைக்கூடங்களில் ஆன்லைனில் ஏலம் நடைபெற்று பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி விவசாயிகளுக்கு பொருட்ளுக்கான பணம் வழங்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
13 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
9 days ago