டெல்லியிலும் பெட்ரோல், டீசல் விலை  உயர்வு: வரியை உயர்த்தியது மாநில அரசு

By செய்திப்பிரிவு

டெல்லியிலும் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டுவரி உயர்த்தப்பட்டுள்ளது.

கரோனாவின் கொடூர தாக்கத்தால் உலக நாடுகள் நிலைகுலைந்துள்ளன. இதனால் மொத்தமாக பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை சரிவு 50% ஆக உள்ளது.

இதுவரையில் இல்லாத அளவுக்கு பெட்ரோல் டீசல் விற்பனைகள் சரிவு கண்டுள்ளன. 2019 ஏப்ரலில் இந்தியா 2.4 மில்லியன் டன்கள் பெட்ரோ மற்றும் 7.3 மில்லியன் டன்கள் டீசல் நுகர்வு செய்துள்ளது, இதே காலத்தில் 645000 டன்கள் ஏடிஎஃப் பயன்படுத்தியுள்ளது.

மார்ச் 2020-ல் பெட்ரோலியப் பொருட்கள் நுகர்வு 17.79% சரிவு கண்டு 16.8 மில்லியன் டன்களாகக் குறைந்தது. டீசல் இதே மாதத்தில் 24.23% சரிவு கண்டு 5.65 மில்லியன் டன்களாகக் குறைந்தது. இதனால் பெட்ரோல் டீசல் விலையும் பல நாடுகளில் குறைந்து வருகிறது.

ஆனால் இந்தியாவில் பல மாநில அரசுகளும் பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் வரியை உயர்த்தி விலை அதேநிலையில் வைத்துள்ளன. இதனால் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள விலை குறைப்பு நுகர்வோருக்கு கிடைக்காத சூழல் உள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரி உயர்த்தப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.25ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50ம் உயர்த்தப்பட்டது. டெல்லியிலும் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டுவரி உயர்த்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

டெல்லியிலும் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டுவரி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.67ம், டீசல் விலை லிட்டருக்கு, ரூ.7.10ம் உயர்த்தப்பட்டுள்ளது.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

மேலும்