கரோனா; துறைமுக பணியாளர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.50 லட்சம் இழப்பீடு: மத்திய அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கரோனா காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டால் துறைமுக பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டால் அனைத்து முக்கிய துறைமுகங்களும் தங்கள் பணியாளர்களை சார்ந்திருப்பவர்களுக்கு அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு இழப்பீடு தொகை வழங்கலாம் என கப்பல் அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

அதன்படி தொழிலாளர் பிரிவு இழப்பீடாக துறைமுகத்தால் நேரடியாகப்
பணியமர்த்தப்பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட அனைத்துத் துறைமுகப் பணியாளர்கள் ரூ. 50.00 லட்சம் இதர ஒப்பந்தத் தொழிலாளர்கள் ரூ. 50.00 லட்சம் வழங்கப்படும்.

துறைமுகம் சார்ந்த பணியில் ஈடுபட்டிருக்கும் போது கொவிட்-19 தொற்று ஏற்பட்டால் உயிருக்கு ஏற்படும் பாதிப்பை ஈடுகட்ட இந்த நிதியுதவி அறிவிக்கப்படுகிறது. இதன்படி கோரிக்கைகளைத் தீர்த்து வைப்பதற்கும், இழப்பீடு வழங்கலுக்கும் கரோனா தான் இறப்புக்கு காரணம் என்று சான்றளிப்பதற்கும் துறைமுகத்தின் தலைவர் தான் உரிய அதிகாரி ஆவார். கொவிட்-19க்கு மட்டுமே பொருந்தும் இந்த இழப்பீடு 30.09.2020 வரை அமலில் இருக்கும், அதன் பின்னர் இது மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

10 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்