தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தொடும்? - வர்த்தகர்கள் சொல்வது என்ன?

By நெல்லை ஜெனா

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை கடந்த ஓராண்டாகவே கணிசமாக உயர்ந்து வருகிறது.

இந்தநிலையில் கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வருவதால் தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக கரோனா தாக்கத்தால் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்ற எண்ணம் பரவி வருவதால் அரசு முதல் தனிநபர்கள் வரையிலும் பாதுகாப்பான முதலீடாக கருதி தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளனர்.

இதுமட்டுமின்றி கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக சரிந்து வருவதால் அதில் உள்ள முதலீடும் தங்கத்தின் பக்கம் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து இந்திய தங்க நகை வர்த்தகர்கள் சம்மேளனத்தின் தமிழகப் பிரிவுத் துணைத்தலைவர் எஸ்.சாந்தக்குமார்

கரோனா நோய்த்தொற்று காரணமாக, பொருளா தாரத்தில் எல்லா துறைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள் ளது. பங்குச்சந்தை, வங்கி, ரியல் எஸ்டேட் ஆகியவற்றின் செயல்பாடுகள் கடுமையாக முடங்கியுள்ளன. இதேநிலை தொடருமானால், தங்கம் விலை மேலும் உயரவே வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.40 ஆயிரத்தை தொடும்’’ என்றார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

மேலும்