செல்வ மகள் திட்டத்தில் பணம் கட்ட 3 மாத கால அவகாசம்: தமிழகத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பயன்

By செய்திப்பிரிவு


செல்மகள் சேமிப்புத் திட்டத்தில் பணம் கட்ட அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர்.

சுகன்யா சம்ரிதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பெண் குழந்தைகள் பயன்பெற்று, தேவையான காலத்தில் அது உதவிகரமாக அமைந்துள்ளது.

குழந்தைகள் பிறப்பில் பாலின விகிதம் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக ”பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015 ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக சுகன்யா சம்ரிதி திட்டம் செயல்படுகிறது.

10 வயதுக்கும் குறைவான பெண் குழந்தையின் பெயரில் ரூ.250 குறைந்தபட்ச டெபாசிட் செலுத்தி, பாதுகாவலர் கூட செல்வ மகள் திட்டத்தில் கணக்கு தொடங்க முடியும் பிறகு நூறின் மடங்குகளாக அவர்கள் பணம் செலுத்தலாம்.

ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 வரையில், பெண் குழந்தைக்கு 15 வயதாகும் வரையில் செலுத்தலாம். அந்தப் பெண் 18 வயதை எட்டும்போது, கல்விச் செலவுக்காக இதில் 50 சதவீத தொகையை எடுத்துக் கொள்ளலாம். அந்தப் பெண் 21 வயதாகும் போது இந்தத் திட்டம் முதிர்ச்சி அடையும்.

தமிழகத்தில் செல்மகள் சேமிப்புத் திட்டத்தில் 5 லட்சத்து 21 ஆயிரம் கணக்குகள் இருக்கின்றன.
பாதுகாவலர்கள் பலரும் வருமான வரி விலக்கு கிடைக்கும் என்பதற்காக நிதியாண்டின் இறுதியில் பணம் செலுத்துவதற்கு காத்திருந்தனர்.

கரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக சிறுசேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களின் வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதால், தாங்கள் செலுத்த வேண்டிய தொகைகளை இயல்பு நிலை திரும்பிய பிறகு செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டது. சுகன்யா சம்ரிதி கணக்கு (எஸ்.எஸ்.ஏ.), பி.பி.எப்., தொடர் வைப்பு நிதி கணக்குகளில் பணம் செலுத்துவதற்கு 3 மாத கால அவகாசம் தரப்படும் என மத்திய நிதி அமைச்சகம்

2019-20 ஆம் ஆண்டுக்கு சுகன்யா சம்ரிதி கணக்கில் செலுத்த வேண்டிய குறைந்தபட்சத் தொகையை செலுத்துவதற்கான காலத்தை ஜூன் 30 வரை மூன்று மாத காலத்திற்கு நீட்டித்த மத்திய அரசு நீட்டிதுள்ளது.

குறைந்தபட்ச தொகையை செலுத்த முடியாமல் போனால் அபராதம் விதிக்கப்பட்டிருக்கும் அல்லது கணக்கையே முடித்து வைத்திருக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கும். ஆனால் சுகன்யா சம்ரிதி கணக்கைத் தொடங்கினார்.

சிறுசேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் பயன்பெறும் வகையில் வட்டி விகிதத்தை அரசு உயர்த்த வேண்டும், யாரையும் சார்ந்திராமல், சொந்தக் காலில் நிற்கும் மகள் நன்றாகப் படித்து, புதிய உச்சங்களைத் தொட ஏதுவாக இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

6 hours ago

வணிகம்

6 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்