இந்தியாவின் புதிய அன்னிய நேரடி முதலீடு கிடுக்கிப்பிடி விதிமுறைகள்: பாகுபாடு காட்டுவதாக சீனா கடும் தாக்கு- 10 முக்கிய அம்சங்கள்

By செய்திப்பிரிவு

கரோனா காலத்தில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்டை நாடுகளின் நிறுவனங்களிடமிருந்து வரும் முதலீடுகளுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடிப் போட்டு புதிய விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது கரோனா பிடியிலிருந்து மீண்ட சீனா தன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பெரிய அளவில் சந்தையில் முதலீட்டை இறக்கியுள்ளதால் இந்திய நிறுவனங்களை சீனா கையகப்படுத்துவதைத் தடுக்கும் நடவடிக்கை என்றே இத்துறை சார்ந்த வல்லுநர்கள் பார்க்கின்றனர்.

இந்தியாவில் 16 சீன நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு பதிவு செய்துள்ளன. இவை 110 கோடி டாலர் வரை முன்னணி பங்குகளில் முதலீடு செய்துள்ளன. இனிமேல் அண்டை நாடுகளில் இருந்து வரும் முதலீடுகளை செபி இனிமேல் தீவிரமாகக் கண்காணிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மற்ற அண்டை நாடுகளான சீனா, நேபாளம், இலங்கை, மியான்மர், பூடான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீட்டுக்கும் அனுமதி பெற வேண்டும்.

இதனையத்து உலக வர்த்தக மையத்தின் பாகுபாடில்லாத சுதந்திர மற்றும் நியாய வர்ததக விதிமுறைகளை மீறுவதாக உள்ளது என்றும் உடனே இந்த பாகுபாட்டுப் போக்கை இந்தியா கைவிட வேண்டும் என்றும் கோரியுள்ளது சீனா.

கரோனா லாக் டவுன் காரணமாக சந்தர்ப்பவாத முதலீடுகள், நிறுவனங்களைக் கையகப்படுத்துதலைத் தவிர்க்கவே அன்னிய முதலீடுகளை துருவி ஆராய்ந்து அனுமதிக்கும் புதிய விதிமுறைகளை இந்திய அரசு உருவாக்கியுள்ளது.

இது தொடர்பாக 10 முக்கிய அம்சங்கள்:

1. முதலீட்டாளர்களுக்கு கூடுதல் தடைக்கற்களை சிலநாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ளது உலக வர்த்தக மையத்தின் பாகுபாடற்ற கொள்கைக்கு விரோதமாகவும், தாராளமய கொள்கைக்கும் வியாபாரம், முதலீட்டை சுலபமாக்கும் போக்குக்கும் எதிராக உள்ளது. அனைத்து நாடுகளின் முதலீடுகளையும் சரிசமமாக இந்தியா பாவிக்கும், இந்த புதிய விதிமுறைகளை இந்தியா கைவிட வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.

2, இந்தப் புதிய கொள்கையின் படி இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளிலிருந்து வரும் முதலீட்டுத் திட்டங்கள் இந்திய அரசை அணுகிய பிறகே அனுமதிக்கப்படும். தானாகவே முன்பு செய்ய முடிந்தது போல் இனி முடியாது. அரசு வழிவகுத்த பாதையின் மூலமாகவே இந்தியாவுடன் எல்லையைப் பகிரும் நாடு முதல்லீடு செய்ய முடியும்.

3. மேலும் குறிப்பாக பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவை ஏற்கெனவே பிற துறைகளில் இருக்கும் முதலீட்டு விதிமுறைகளுடன் பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி ஆகியவற்றில் முதலீடு செய்ய இந்திய அரசின் வழிமூலமாகவே முடியும்.

4. நேபாளம், சீனா, பூடான், மியான்மர் ஆகிய நாடுகள் இந்தப் புதிய விதிமுறைகளின் கீழ் வரும். மற்ற நாடுகள் முதலீடு செய்த பிறகு ஆர்பிஐக்கு தெரிவித்தால் போதும் முன் கூட்டிய அனுமதி தேவையில்லை, ஆனால் பாக், வங்கதேசம், சீனா, பூடான், மியான்மர், ஆகியவை இந்திய அரசின் அனுமதியின்றி இங்கு முதலீடு செய்ய முடியாது, அதாவது நேரடியாக அன்னிய முதலீடு இவர்களுக்கு இல்லை.

5.கோவிட்-18 கொள்ளை நோயினால் பலநாட்டின் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் உள்ளன. இந்த நிறுவனங்களை சீன நிறுவனங்கள் மலிவு விலைகளில் கையகப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை எழுந்துள்ளது. ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளும் தங்கள் நிறுவனங்களைக் காப்பாற்றிக் கொள்ள் அன்னிய நேரடி முதலீடு விதிமுறைகளை இறுக்கியுள்ளது.

6. மத்திய அரசு புதியக் கட்டுப்பாடுகளை அறிவித்த பிறகு ராகுல் காந்தி, “என்னுடைய எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு எஃப்.டி.ஐ விதிமுறைகளை மாற்றியதற்கு நன்றி” என்று ட்வீட் செய்தார்.

7. ஏப்ரல் 12ம் தேதி காங்கிரஸ் எம்.பி. “பெரிய பொருளாதார மந்தம் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களை பலவீனப்படுத்தியது. இதனால் அவற்றை வேறு நாட்டு நிறுவனங்கள் கையக்கப்படுத்த ஈர்க்கிறது. நாட்டின் இந்த கரோனா நெருக்கடியில் நம் கார்ப்பரேட் நிறுவனங்களை அன்னிய நிறுவனங்கள் கையகப்படுத்துவதை நாம் அனுமதிக்கக் கூடாது” என்று தெரிவித்திருந்தார்.

8. சீனா மக்கள் வங்கி ஹவுசிங் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் (எச்.டி.எஃப்.சி) யின் 1.01% பங்குகளை வாங்கியது ராகுல் காந்தியை விழிப்படையச் செய்து அவர் அப்போது ட்வீட் செய்தார்.

9. இந்த எச்.டி.எஃப்.சி. - சீன மக்கள் வங்கி விவகாரம் புதிய இந்திய அன்னிய முதலீடு விதிமுறைகளில் வராது காரணம் 10% க்குக் குறைவாகவே வாங்கப்பட்டுள்ளது.

10 இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு 2 விதங்களில் வழங்கப்படுகிறது. ஒன்று, நேரடியாக முதலீடு செய்வது, அரசு அனுமதி தேவையில்லை. இரண்டாவது வழிமுறை சில துறைகளில் அரசு அனுமதியில்லாமல் நேரடியாக முதலீடு செய்ய முடியாது என்பதாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

வணிகம்

5 hours ago

வணிகம்

6 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்