பிரதமர் ஏழைகள் நலத் திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் கரோனா தொற்றுக்காக கோரப்பட்ட நிவாரண நிதி 15 நாட்களில் 3.31 லட்சம் பேருக்கு வழங்கியது
பிரதமர் ஏழைகள் நலத் திட்டத்தின் ஒரு பகுதியாக கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்திலிருந்து தங்கள் பணத்தை திரும்பப் பெறுவதற்காக மார்ச் 28 ம் தேதி அன்று அறிமுகப்படுத்திய சிறப்பு விதிமுறை நாட்டின் தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் நிவாரணம் அளித்துள்ளது.
இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, வெறும் 15 நாட்களே கடந்துள்ள நிலையில், தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் 3.31 லட்சம் பேருக்கு ரூ 946.49 கோடியை வழங்கியுள்ளது. கூடுதலாக, இந்த திட்டத்தின் கீழ் டி.சி.எஸ் உட்பட விலக்கு பெற்ற தனியார் அறக்கட்டளைகளாலும் ரூ 284 கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது,
இந்த விதிமுறையின் கீழ், மூன்று மாதங்களுக்கான அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி அல்லது தொழிலாளர் வைப்பு நிதியில் உள்ள தொகையில் 75 சதவீதம் ஆகிய இவை இரண்டில் எது குறைவானதோ, அதை திருப்பி செலுத்தத் தேவையில்லாத வகையில் பெற்றுக்கொள்ளலாம்.
தொழிலாளர் வைப்பு நிதி உறுப்பினர்கள் குறைந்த தொகைக்கும் விண்ணப்பிக்கலாம். இந்த தொகை முன் பணமாக வழங்கப்படுவதால், வருமான வரி விலக்கு இதற்கு பொருந்தாது.
முக்கிய செய்திகள்
வணிகம்
15 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago