அத்தியாவசியப் பொருட்களின் டெலிவரியைத் தொடங்கிய ஸ்விக்கி: ஆர்டர் செய்வது எப்படி?

By ஐஏஎன்எஸ்

உணவு டெலிவரி சேவையான ஸ்விக்கி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் டெலிவரியை இந்தியா முழுவதும் 125 நகரங்களில் அறிமுகம் செய்துள்ளதாகக் கூறியுள்ளது.

இந்தியா முழுக்கவே கரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.

அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வீட்டிலிருந்து வெளியே வருகிறார்கள். தற்போது மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் டெலிவரியையும் ஸ்விக்கி தொடங்கியுள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள ஸ்விக்கியின் தலைமை இயக்க அதிகாரி, "இந்த அசாதாரண சூழலில் எங்களது உள்ளூர் டெலிவரி சேவை, வாடிக்கையாளருக்கு வசதியையும் பாதுகாப்பையும் தருகிறது. வணிகர்களுக்கு வருமானம் தருகிறது. தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி, இந்த ஊரடங்கு பொழுதில் குடிமக்களை வீட்டிலேயே இருக்க ஊக்கப்படுத்துவதே எங்கள் நோக்கம்" என்று கூறியுள்ளார்.

ஸ்விக்கி செயலியில், 'Grocery' என்ற தேர்வின் கீழ் மளிகைப் பொருட்கள் கிடைக்கும். அவர்கள் பகுதியில் இருக்கும் பலசரக்குக் கடையைத் தேர்வு செய்து, பின் பொருட்களைத் தேர்வு செய்துவிட்டு செக் அவுட் செய்ய வேண்டும். செயலியிலேயே பணம் கட்டுபவர்கள், தொடர்பில்லாத டெலிவரி வசதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

ப்ராக்டர் அண்ட் கேம்பிள், காத்ரேஜ், டாபர், மேரிகோ, சிப்லா உள்ளிட்ட பிரபல தேசிய பிராண்டுகளுடன் ஸ்விக்கி இணைந்து இந்தச் சேவையை வழங்குகிறது. மேலும் ஜீனி என்ற புதிய வசதியையும் ஸ்விக்கி அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் நகரத்துக்குள் எந்தப் பொருளையும், எங்கிருந்தும், எங்கும் ஸ்விக்கி நபர்களால் டெலிவரி செய்ய முடியும். நம் வீட்டிலிருந்து நண்பர் வீட்டுக்கு ஒரு பொருளைச் சென்று சேர்க்க ஜீனி சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இப்போதைக்கு 15 நகரங்களில் இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்