கரோனா வைரஸ் விவகாரத்தில் உலகச் சுகாதார அமைப்பு சீனாவுக்குச் சாதகமாகச் செயல்பட்டு உலக மக்களின் கழுத்தை அறுத்து விட்டது என்று சாடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்போது உலக வர்ததக அமைப்பையும் சாடியுள்ளார்.
உலக வர்த்தக அமைப்பு அமெரிக்காவை எப்போதுமே நியாயமற்ற முறையில் நடத்தியுள்ளது எனவே அது மாறவில்லையெனில் விலகவும் தயங்க மாட்டோம் என்று மிரட்டியுள்ளார்.
சீனா நம்பமுடியாத அளவிற்கு எங்களையும் பிற நாடுகளையும் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது. உதாரணமாக, அவர்கள் வளரும் தேசமாக கருதப்படுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
அவர்கள் வளரும் நாடு என்பதால் சீனாவுக்கு பெரிய நன்மைகள் கிடைக்கின்றன. இந்தியா, வளரும் நாடு. அமெரிக்கா பெரிய வளர்ந்த நாடு. சரி, எங்களுக்கு ஏராளமான வளர்ச்சி உள்ளது.
வளரும் தேசமாக இருப்பதால் அவர்களுக்கு பல நன்மைகள் வழங்கப்பட்டன. உலக வர்த்தக அமைப்பால் அமெரிக்காவும் சாதகமாக பயன்படுத்தப்பட்டது.
அமெரிக்காவின் உதவியுடன் உலக வர்த்தக அமைப்பில் இணைந்த பின்னர் சீனப் பொருளாதாரம் வளர்ச்சியடையத் தொடங்கியது. உலக வர்த்தக அமைப்பில் சேர சீனா அனுமதிக்கப்பட்டபோது, அது அமெரிக்காவிற்கு மிகவும் மோசமான நாளாக இருந்தது.
எனவே உலக வர்த்தக அமைப்பு ஒழுங்காக வடிவம் பெறவில்லை எனில் நாங்கள் விலகத் தயங்க மாட்டோம். உலக வர்த்தக அமைப்பின் செயல்பாடுகளை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை இதுவரை போடப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களிலேயே மோசமானது” என்றார் ட்ரம்ப்.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
9 days ago
வணிகம்
9 days ago