வீட்டிலிருக்க அறிவுறுத்தும் வோடஃபோன் நாய்

By செய்திப்பிரிவு

வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் சின்னமாக இருக்கும் சீகா என்கிற நாய் மீண்டும் அந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் இடம்பெற ஆரம்பித்துள்ளது. அதேபோல ஸூஸூக்களும் இடம்பெறுகின்றன.

வோடஃபோன் நிறுவனம், ஹட்ச் என்று அறியப்பட்டபோது 2003 ஆம் ஆண்டு, அவர்களின் விளம்பரங்களில், சிறிய நாய் ஒன்று ஒரு சிறுவன் எங்கு சென்றாலும் அவன் பின்னால் செல்லும். பக் (PUG) என்ற இனத்தைச் சேர்ந்த இந்த நாய் இதன் பிறகு மிகப் பிரபலமானது.

நீங்கள் எங்கு சென்றாலும் தொடரும் என ஹட்ச் நிறுவனத்தின் நெட்வொர்க் ஆற்றலைக் குறிக்கும் விதமாக இந்த விளம்பரம் ஒளிபரப்பானது. கடந்த 17 வருடங்களாக, ஹட்ச் வோடஃபோனாக மாறிய போதும் சரி, பின் வோடஃபோன் ஐடியாவோடு சேர்ந்த போதும் சரி, சீகா நாய் விளம்பரங்களில் இடம்பெற்றது.

ஆனால், காலப்போக்கில், அந்தச் சிறுவன் காணாமல் போய் நாய் மட்டும் விளம்பரங்களில் வந்தது. அவ்வப்போது காணாமலும் போனது. இந்த இடைவெளியை ஸூஸூக்கள் (ZooZoos) நிரப்பின. முக்கியமாக ஐபிஎல் போட்டிகளின் போது ஸுஸு விளம்பரத்துக்கென்றே பெரிய ரசிகர் கூட்டம் உருவானது.

கடைசியாக ஜனவரி 2018-ல் வெளியான விளம்பரத்தில், வோடஃபோன் இந்தியாவின் 4ஜி சேவைகளைப் பற்றிச் சொல்லும் விளம்பரத்தில் சீகா நாய் தலைகாட்டியது. அதன் பிறகு இப்போதுதான் இடம்பெற்றுள்ளது.

சமீபத்தில் வெளியாகியுள்ள இணைய விளம்பரத்தில், சீகா மீண்டும் தனது கூண்டுக்குள் சென்று உட்கார்ந்து கொள்கிறது. மக்கள் வீட்டிலேயே, பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்துகிறது. மேலும் வோடஃபோனோடு இணைந்திருங்கள் என்றும் இந்த விளம்பரம் சொல்கிறது. இந்த விளம்பரத்தில் பழைய விளம்பரங்களின் சில காட்சிகளே பயன்படுத்தப்பட்டுள்ளன.

இன்னொரு பக்கம் ஸூஸூக்களை வைத்து வரும் புதிய விளம்பரங்கள், வோடஃபோன் ஐடியா மொபைல் சேவையைப் பற்றி சொல்லும் விதமாகவே அமைத்துள்ளன.

- ராஜேஷ் குரூப், தி இந்து (பிசினஸ் லைன்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

12 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்