நிலுவையில் இருக்கும் ரூ.5 லட்சம் வரையிலான ரீபண்ட் தொகையை வருமான வரித் துறை உடனடியாக வழங்கவுள்ளது.
மேலும் தொழில் நிறுவனங்களின் இடர்களை போக்கும் வகையில், ஜிஎஸ்டி மற்றும் சுங்க வரி ரீபண்ட் நிலுவைத் தொகை ரூ.18,000 கோடியும் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டில் கரோனா வைரஸ் பரவிவரும் சூழலில் வருமான வரி செலுத்துவோர் மற்றும் தொழில் நிறுவனங்களின் இடர்பாடுகளை களைய முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் இருக்கும் ரூ.5 லட்சம் வரையிலான, வருமான வரி ரீபண்ட் தொகை உடனடியாக வழங்கப்படும். இதன் மூலம் 14 லட்சம் பேர் பலன் அடைவார்கள். இதுபோல் தொழில் நிறுவனங்களுக்கான ஜிஸ்டி மற்றும் சுங்க வரி ரீபண்ட் தொகை அனைத்தையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்படசுமார் 1 லட்சம் தொழில் நிறுவனங்கள் பலன் அடையும். மொத்தம்சுமார் ரூ.18,000 கோடி அளவுக்குஇந்த ரீபண்ட் தொகை வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ்பரவுவதை தடுக்க ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
இதனால் தொழில் நிறுவனங்கள், பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago