வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்தியர்வகளுக்கு ரீபண்ட் தொகை இருந்தால் 5 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு உடனடியாக அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதனால் ஏரளமானோர் வருவாயின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு நிதியுதவி திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.
இந்தநிலையில் வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்தியர்வகளுக்கு ரீபண்ட் தொகை இருந்தால் 5 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு உடனடியாக அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த ஆண்டு வருமான வரி தாக்கல் செய்தபிறகு கணக்கு சரபார்க்கப்பட்டு யாருக்கேனும் ரீபண்ட் தொகை திரும்பி தர வேண்டியது இருந்தால் அதனை உடனடியாக திரும்பித் தர மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 14 லட்சம் பேர் பயனடைவர்.
அதுபோலவே ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்தவர்களுக்கு ரீபண்ட் தொகை இருந்தால் திருப்பி தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 லட்சம் ரூபாய் வரையிலான ரீபண்ட் தொகையை உடனடியாக விடுவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
20 hours ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago