ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது பயணிகள் விமானத்தை முதன் முதலாக சரக்கு விமானமாக மாற்றி இயக்கியுள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் இறுதி வரை விமானப்போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் விமானங்கள் அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலையில் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
» கரோனாவுக்கு எதிரான போரில் கைதட்டுவதால், விளக்கு ஏற்றுவதால் நம்மால் வெல்ல முடியாது: சிவசேனா சாடல்
» தெரிந்துகொள்ளுங்கள்: கரோனா வதந்திகளைத் தடுக்க வாட்ஸ் அப் நிறுவனம் புதிய கட்டுப்பாடு
இந்தநிலையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது பயணிகள் விமானத்தை முதன் முதலாக சரக்கு விமானமாக மாற்றி இயக்கியுள்ளது. இந்த விமானம் டெல்லியில் இருந்து சென்னைக்கு அவசர தேவைக்கான 11 டன்கள் பொருட்களை ஏற்றிக் கொண்டு இன்று சென்றது. பயணிகள் அமரும் இருக்கைகளில் சரக்கு பெட்டிகள் அடுக்கப்பட்டன.
இருக்கையை மாற்றாமல் அப்படியே அதில் சரக்குகள் ஏற்றப்பட்டு கொண்டு வரப்பட்டன. பின்னர் இந்த விமானம் சென்னையில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக் கொண்டு மீண்டும் டெல்லி வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு காலம் முடியும் வரை இந்த பயணிகள் விமானம் தொடர்ந்து சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
5 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago