கரோனா பொருளாதார சரிவிலிருந்து மீள சீனா பெரிய அளவில் வட்டி விகிதம் குறைப்பு; சந்தையில் 7 பில்லியன் டாலர்களை முதலீடு செய்கிறது

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து 3 மாதங்களில் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்குத் திரும்பிய சீனா லாக்-டவுன் உள்ளிட்ட விவகாரங்களினால் பாதிக்கப்படும் பொருளாதார சீரழிவை சீர்த்தூக்க வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை பெருமளவு குறைத்ததோடு சந்தையை மீட்க 7 பில்லியன் டாலர்கள் தொகையை முதலீடு செய்கிறது.

சீனா மக்கள் வங்கி என்ற மத்திய வங்கி 50 பில்லியன் யுவான்களுக்கான மீள் மறுகொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, 7 நாட்களுக்கான மீள் மறுகொள்முதல் வட்டி விகிதத்தை 2.40%லிருந்து 2.20% ஆகக் குறைத்துள்ளது.

2015 முதல் இதுதான் பெரிய 7 நாட்கள் ரிவர்ஸ் ரிபோ வட்டி விகிதக் குறைப்பாகும்.

கரோனா வைரஸுக்கு உலக அளவில் பலியானோர் எண்ணிக்கை 33,000த்தைக் கடந்தது, வர்த்தகம் தொழிற்துறை விவசாயம் நலிந்து போயுள்ளன. இதன் உலக அளவிலான பரவல் விரைவில் சரியாகும் என்று தோன்றவில்லை, குறிப்பாக ஏற்றுமதியை நம்பியே சீனா உள்ளது.

பொலிட்பீரோ கூறும்போது, முறையான நிதிப்பற்றாக்குறை விகிதம் அதிகரிக்கப்பட்டால், சிறப்பு கருவூல பாண்ட்கள் வெளியிடப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

வட்டி விகிதக் குறைப்பினால் மக்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும், என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனாவுக்கு முன் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2020-ல் 5.7% ஆக இருக்கும் என்று தெரிவித்த எஸ் அண்ட் பி உலக தரநிலை நிறுவனம், தற்போது கரோனாவுக்கு பின்பு பாதியாக வளர்ச்சியைக் குறைத்து கணித்துள்ளது.

கொரோனா வைரஸைத் தொடர்ந்து உலக நாடுகள் நோய்த்தடுப்புக்கும் அதனால் ஏற்படும் பொருளாதார சீரழிவுகளிலிருந்து மீள பெரிய அளவில் 5 ட்ரில்லியன் டாலர்கள் அளவுக்கு மீட்புப் பொருளாதாரத்துக்காக அறிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு முடிவடைந்து இதன் பாரதூரமான விளைவுகளை அனைத்து நாட்டு மக்களும் வரி விகித உயர்வு என்ற சுமையைத் தாங்க வேண்டி வரும் என்று இப்போதே பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

வணிகம்

7 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

மேலும்