வட்டியை குறைத்தது எஸ்பிஐ வங்கி: வீட்டுக்கடன் வட்டி எவ்வளவு குறையும்?

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்த 21 நாட்களும் தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை முடங்கும் சூழல் ஏற்படும். அதனால் பொருளாதாரச் சுணக்கம் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டது.


இதையடுத்தது நேற்று 1.70 லட்சம் கோடி மதிப்பில் பொருளாதார நிதித் தொகுப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி கந்த தாஸ், தொழில்துறையினருக்கும், மக்களுக்கும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

கரோனா வைரஸால் 21 நாட்கள் ஊரடங்கால் ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்கும் வகையில் கடனுக்கான ரெப்போ வட்டி வீதத்தை 5.15 சதவீதத்தில் இருந்து 75 புள்ளிகள் குறைத்து 4.4 சதவீதமாக வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி நிர்ணயித்தது.

அதுமட்டுமல்லாமல் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு தொழில் நிறுவனங்கள் வங்கியில் கடன் பெற்றிருந்தால், அந்த கடனுக்கான மாத்த தவணையை செலுத்த 3 மாதங்கள் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாட்டின் முன்னணி வர்த்தக வங்கியான எஸ்பிஐ வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. அதன்படி வெளியில் கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதம் 7.80 சதவீத்தில் இருந்து 7.05 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அதுபோலவே ரெப்போவுடன் இணைந்த வட்டி விகிதம் 7.40% ல் இருந்து 6.65% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

* இதன் மூலம் வீட்டுக்கடன் 30 ஆண்டு காலத்திற்கு பெற்றுள்ளவர்களுக்கு லட்சம் ரூபாய்க்கு ரூ. 52 குறைகிறது.

* பிக்ஸ்ட் டெபாசிட்டுகளுக்கு 20- 50 என்ற அடிப்படையில் வட்டி குறைகிறது. அதிகமான டேர்ம் டெபாசிட்டுகளுக்கு 50 -100 என்ற அடிப்படையில் வட்டி குறையும். இது மார்ச் 28- ம் தேதியான இன்று முதல் அமலுக்கு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

மேலும்