2020-ல் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை  2.5%  ஆகக் குறைத்தது மூடீஸ் நிறுவனம்- கரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரம் மீளும் கால அளவுதான் என்ன?

By செய்திப்பிரிவு

2020 காலண்டர் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை 2.5% ஆகக் குறைத்துள்ளது மூடிஸ் இன்வெஸ்டார் சர்விஸ் என்ற மதிப்பாய்வு நிறுவனம். முன்பு நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 5.3% என்று மதிப்பிட்டிருந்தது, ஆனால் கரோனா வைரஸ் தாக்குதலினால் உலகப் பொருளாதாரம் அதிர்ச்சியை சந்தித்து வருகிறது.

2020-21-க்கான உலகப் பொருளாதார பார்வையில் மூடிஸ் நிறுவனம் இந்தியாவில் வருவாய் இழப்பு கடுமையாக ஏற்படும் என்று கணித்துள்ளது. 2021-ல் பொருளாதாரம் மீண்டும் ஏற்றப்பாதைக்குத் திரும்பலாம் என்று கூறியுள்ளது.

“இந்தியாவில் பொருளாதாரத்தில் கடன் புழக்கம் பணப்புழக்கக் குறைபாடுகளினால் வங்கி மற்றும் வங்கியல்லாத நிதித்துறைகளில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.” என்று மூடிஸ் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்புத் தீவிரத்தை தடுக்க நாடு 3 வார கால முழு அடைப்பில் உள்ளது, அத்தியாவசிய பொருட்கள் கூட குறிப்பிட்ட கால நேரம் வரைதான் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுவரை கரோனாவுக்கு இந்தியாவில் 17 பேர் பலியாகியுள்ளனர்.

லாக்-டவுன் காரணமாக அனைத்து வர்த்தகங்காள், தொழிறசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் தற்காலிக வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனையடுத்து உலகப் பொருளாதாரமே 2020-ல் சுருங்கும் என்கிறது மூடிஸ். ஆனால் 2021-ல் வளர்ச்சி தொடங்கும் என்கிறது.

உலகப்பொருளாதாரத்தில் ஜிடிபி 0.5% குறையும் என்று கூறும் மூடிஸ், 2021-ல் 3.2% க்கு அதிகரிக்கும் என்று கணித்துள்ளது மூடிஸ்.

கரோனா வைரஸ் பரவலுக்கு முன்பாக கடந்த ஆண்டு நவம்பரில் மூடிஸ் தர மதிப்பு முகமை உலகப் பொருளாதாரம் 2.6% வளர்ச்சி அடையும் என்று கணித்தது.

“2008 பொருளாதார சீர்கேடு நிலைமைகள் போல் தற்போது நிதித்துறைகள் பெரிய அளவில் அழுத்தத்தைச் சந்தித்து வருகிறது. பல நாட்டு அரசுகள், மத்திய வங்கிகள் பலவகையான அதிவேக கொள்கைகளை வகுத்தெடுத்தும் பொருளாதார நிலைமைகள் கரோனாவினால் பெரிய அளவில் முடக்கம் கண்டுள்ளது..

தேவையில் பெரிய அளவில் அடுத்த 2- 4 மாதங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இறுக்கம் ஏற்படும், கரோன லாக் டவுன், வருவாய் இழப்புகளின் காரணமாக விளைவுகள் இரட்டிப்பாகி உலகம் முழுதுமே பொருளாதாரம் பெரிய நெருக்கடியைச் சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது..

மேலும் அடுத்த சில மாதங்களில் வேலையிழப்புகள் பல நாடுகளிலும் அதிகரிக்கும், இதிலிருந்து மீள்வது என்பது வேலையிழப்புகள், வர்த்தக இழப்புகள் ஆகியவை நிரந்தரமா, அல்லது தற்காலிகமா என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படும்.

பொருளாதார சரிவிலிருந்து மீள சில பணக்கார நாடுகள் பெரிய அளவில் சலுகைகளை உதவிகளை அளித்து வரும்போதிலும் சிறு வர்த்தகங்கள், பொருளாதார ரீதியாக நலிவுற்ற தனிநபர்கள், நிரந்தரமற்ற வேலையில் இருப்பவர்கள் ஆகியோருக்கு பண நெருக்கடி ஏற்படவே செய்யும்.

வரிச்சலுகை, நேரடி பணப்பரிமாற்றம், கடன் தள்ளுபடிகள், வர்த்தகங்களுக்கு மானியங்கள், வங்கிக் கடன்களுக்கு அரசு உத்தரவாதம் போன்ற நிதிரீதியான அளவுகோல்களை இந்தியா உட்பட பல நாடுகளும் அமல்படுத்தி வருகின்றன.

இந்திய அரசு வியாழனன்று ரூ.1.7 லட்சம் கோடி நிவாரணத் திட்டங்களுக்காக ஒதுக்கியுள்ளது. இதில் இலவச உணவுப்பொருள், ஏழைகளுக்குப் ரொக்க உதவி ஆகியவை அடுத்த 3 மாதங்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கிகள் மக்களிடையே பணப்புழக்கத்தை உறுதி செய்துள்ளன, வங்கிகள் நடைமுறை ஆக்ரோஷமாக இருக்க வேண்டும். கடன்கள் தடையின்றி வழங்கப்பட வேண்டும்.

என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் இந்த கரோனா நெருக்கடியின் பொருளாதார பாதிப்புகளை கணிக்க முடியவில்லை. இதில் அறிய முடியாதவை பல, இந்த வைரஸை கட்டுப்படுத்த எத்தனை காலம் பிடிக்கும். எத்தனை காலம் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படும் போன்றவை அறிய முடியாதவையாகும்.” இவ்வாறு மூடிஸ் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

வணிகம்

7 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்