கரோனா வைரஸ் தொற்று காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிதித் திட்டத்தை அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்பு படி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் கடைகள் அடைக்கப்பட்டு, தொழிற்சாலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருமளவில் பாதிக்கும் என்ற கவலை எழுந்துள்ளது.
» தங்கம் விலை கணிசமாக உயர்வு: இன்றைய விலை நிலவரம் என்ன?
» கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தீவிர சிகிச்சை பிரிவு அமைக்க ரொனால்டோ உதவி
இந்தநிலையில், கரோனா வைரஸ் தொற்று காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிதித் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவால் ஏழைத் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளனர்.
அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. ஒருவர் கூட பசியுடன் இருக்கக் கூடாது. எனவே வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிதித் திட்டம் அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago