கரோனா; எந்த வங்கி ஏடிஎம்களிலும் பணம் எடுக்கலாம்; 3 மாதங்களுக்கு கட்டணம் இல்லை: மத்திய அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

டெபிட் கார்டு மூலம் பணம் எடுப்பவர்கள் எந்த வங்கி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுத்தாலும் ஜூன் 30-ம் தேதி வரை கட்டணம் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில் தொழில்பாதிப்பு, பொருளாதார சிக்கல் ஏற்பட்டு வரும் நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதன்படி நடப்பு நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மார்ச் 31-ம் தேதியில் இருந்து ஜூன் 30-ம் தேதியாக நீட்டித்து அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி டெபிட் கார்டு மூலம் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும்போது எந்த வங்கி ஏடிஎம்களில் இருந்தும் எந்த வங்கி ஏடிஎம் கார்டையும் பயன்படுத்தி கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேறு வங்கி ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் தற்போது வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. சில வங்கிகளில் இந்த அபராதம் 100 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இந்தநிலையில் ஜூன் 30-ம் தேதி வரை எந்த வங்கி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுத்தாலும் கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்