வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மார்ச் 31-ம் தேதியில் இருந்து ஜூன் 30-ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில் தொழில்பாதிப்பு, பொருளாதார சிக்கல் ஏற்பட்டு வரும் நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இதன்படி நடப்பு நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மார்ச் 31-ம் தேதியில் இருந்து ஜூன் 30-ம் தேதியாக நீட்டித்து அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தவிர வருமான வரி தொடரபாக மேலும் பல்வேறு அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இதில் முக்கிய அம்சங்கள் வருமாறு:
» வருமான வரி தாக்கல் செய்ய கடைசிநாள்: ஜூன் 30-ம் தேதியாக நீட்டிப்பு
» பணப்புழக்கத்தை அதிகரிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ரூ.1 லட்சம் கோடி நிதி
* வருமான வரி தாக்கல் செய்ய தவறியவர்கள் 10 சதவீத கூடுதல் வரியுடன் தாக்கல் செய்யும் சிறப்பு திட்டத்தின் கீழ் ஜூன் 3-ம் தேதி வரை தாக்கல் செய்ய முடியும். தற்போது கூடுதல வரியின்றி அதே காலத்திற்குள் செலுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* வருமான வரி பிரிவு 6 ஏ-வின் கீழ் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு வழங்கப்படும் வரி விலக்கு வழங்கும் தேதி மார்ச் 31-ம் தேதியில் இருந்து ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
* டிடிஎஸ் பிடித்தம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படவில்லை. அதேசமயம் அதற்காக விதிக்கப்படும் 9% சதவீதமாக குறைக்கப்படுகிறது.
* பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30ம்- தேதியாக நீட்டிக்கப்படுகிறது. முன்பு அது மார்ச் 31-ம் தேதியாக இருந்தது.
* வருமான வரி தொடர்பான நோட்டீஸ் வழங்குதல், விசாரணை, கட்டணம், உள்ளிட்ட அனைத்திற்கும் கால அவகாசம் ஜூன் 30-ம் தேதியாக நீட்டிக்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago