பிப்ரவரியில் இந்தியாவின் ஏற்றுமதி 2.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்தஆறு மாதங்களாக ஏற்றுமதி சரிந்து வந்த நிலையில் கடந்த மாதம் சற்றுஉயர்வு கண்டுள்ளது. மொத்த அளவில் கடந்த மாதத்தில் ஏற்றுமதி மதிப்பு 27.65 பில்லியன்டாலராக உள்ளது. முக்கிய ஏற்றுமதிப் பொருட்களான பெட்ரோலியத் தயாரிப்புகள், பொறியியல் பொருட்கள், மின்னணுபொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அதேசமயம் ஆபரணப் பொருட்களின் ஏற்றுமதி 20 சதவீதம் சரிந்துள்ளது.
அதேபோல், இறக்குமதியும் பிப்ரவரி மாதத்தில் அதிகரித்துள்ளது. இறக்குமதி 2.48 சதவீதமாக உயர்ந்து 37.5 பில்லியன் டாலராக உள்ளது.அதன்தொடர்ச்சியாக ஏற்றுமதி இறக்குமதிக்கு இடையேயான பற்றாக்குறை 9.85 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் 7 மாதங்கள் ஏற்றுமதி சரிந்தது. மொத்த அளவில் இந்த காலகட்டத்தில் ஏற்றுமதி 1.05 சதவீதம் சரிந்து 292.91 பில்லியன் டாலராகஉள்ளது. அதேபோல் இறக்குமதி 9 மாதங்கள் சரிந்தது. மொத்த அளவில் இறக்குமதி 7.30 சதவீதம் அளவில் சரிந்து 436.30 பில்லியன் டாலராக உள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago