சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் எனப்படும் கரோனா வைரஸ் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 பரவியுள்ளது.
அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் உயிர்ப்பலியை வாங்கியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 31 பேர் கரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவதற்கு 30 நாட்கள் தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த தடையால் பெருமளவு தொழில் தேக்கமடைந்து பொருளாதார பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இதன் எதிரொலியால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.
கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவு வீழ்ச்சி யடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்தது.
» சிவகாசி பட்டாசு ஆலைகளில் சிபிஐ ஆய்வு: 14 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனை
» 'வருங்கால முதல்வர்' என சொல்வதை நிறுத்துங்கள்: ரஜினி வேண்டுகோள்
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 2700 புள்ளிகளுக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்து 33,200 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
இதுபோலவே தேசிய பங்குச்சந்தையிலும் வர்த்தகம் 650 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்து 9,700 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதனால் முதலீட்டாளர்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
9 days ago
வணிகம்
9 days ago