நிதி மோசடிகள் அதிகரித்துவரும் நிலையில் தீவிர மோசடிகளை விசாரிக்கும் அமைப்பை மேலும்வலுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக விசாரணை அதிகாரிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்த முடிவு செய்துள்ளது.
நிறுவனங்களில் மோசடி நடப்பது அதிகரித்துவருகிறது. மேலும்இந்த மோசடிகள் மிக சிக்கலானவை. இதனால் பொருளாதாரத்துக்கும் நிறுவனம் சார்ந்த ஊழியர்களுக்கும் பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் ஏராளமானமோசடி வழக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் இருக்கின்றன. நிறுவன மோசடிகள், நிதி மோசடிகள் உள்ளிட்டவற்றை குறைக்கும் பொருட்டு தீவிர மோசடிகளை விசாரிக்கும் அமைப்பின் அதிகாரிகள் எண்ணிக்கையை அரசு 350 ஆக உயர்த்த உள்ளதாக நிறுவனங்கள் விவகாரத் துறை செயலர்இஞ்சேதி னிவாஸ் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 90ஆகவும், புதிதாக 20முதல் 30 வழக்குகள் சேர்ந்துகொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். எனவே அதற்கேற்ப அதிகாரிகள் எண்ணிக்கை அவசியமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
தற்போது இந்த விசாரணை அமைப்பில் 133 அதிகாரிகள் உள்ளனர். இந்த எண்ணிக்கை தகுதி வாய்ந்த, துறை நிபுணத்துவம் பெற்ற நபர்களைத் தேர்ந்தெடுத்து 350 ஆக உயர்த்தப்படவிருக்கிறது.
மோசடிகளை விசாரிப்பதற்கான நடைமுறை வழிகாட்டுதல்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக 12 பேர் கொண்ட உயர் மட்ட குழு இஞ்சேதி னிவாஸ் தலைமையில் நிறுவப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
11 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago