நடப்பு நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்டதைவிட கூடுதலாக ரூ.54,000 கோடி செலவிட மத்திய அரசு திட்டம்: நாடாளுமன்றத்தின் ஒப்புதலைக் கோரியது

By செய்திப்பிரிவு

நடப்பு நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதி அளவைவிட செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், கூடுதலாக ரூ.54,000 கோடி செலவிட நாடாளுமன்றத்தின் ஒப்புதலை மத்திய அரசு கோரியுள்ளது.

மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு, பாதுகாப்புத் துறை தொடர்பான ஓய்வூதியம் ஆகியவற்றுக்கு செலவிட போதிய நிதி இல்லாத நிலையில் இந்த கூடுதல் நிதி கோரிக்கை மத்திய அரசு முன்வைத்துள்ளது.

நிதி ஆண்டுக்கான ஒதுக்கப்பட்ட நிதி அளவைவிட செலவினம் அதிகரிக்கும்போது, கூடுதலாக செலவு செய்ய மத்திய அமைச்சகம் நாடளுமன்றத்தின் ஒப்புதலை வேண்டுவது வழக்கம். அந்த வகையில், கூடுதல் செலவினம் தொடர்பான கோரிக்கைகளை மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாகுர் மக்களவையில் நேற்று சமர்ப்பித்தார். அதன்படி, கூடுதலாக ரூ.54,000 கோடி செலவிட ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கோரினார்.

இதில் ரூ.20,000 கோடி மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்குவதற்கும், ரூ.6,988 கோடி பாதுகாப்புத் துறை சார்ந்த செலவினங்களுக்கும், ரூ.5,730 கோடி பாதுகாப்புத் துறையின் ஓய்வூதியத் திட்டத்துக்காகவும், ரூ.1,003 கோடி தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காகவும் செலவிடப்பட உள்ளதாக தெரிவிக்கபட்டது.

அரசின் நிதிப் பற்றாக்குறை அளவு கடுமையான அளவில் உயர்ந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டு முழுமைக்குமாக நிதிப் பற்றாக்குறையை ரூ.7.67 லட்சம் கோடிக்குள் கட்டுக்குள் வைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான நிதிப் பற்றாக்குறையே ரூ.9.85 லட்சம் கோடியாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

12 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்