தொலைத் தொடர்பு நிறுவனங்களின் உரிமக் கட்டணத்தை குறைக்க வேண்டும்: செல்லுலார் ஆப்ரேட்டர்கள் சங்கம் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக் கும் தொலைத் தொடர்பு நிறுவனங் களை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு ஏஜிஆர் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்றும் உரிமக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றும் இந்திய செல்லுலார் ஆப்ரேட்டர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது வங்கிகள் தொலைத் தொடர்பு நிறு வனங்களுக்குக் கடன் வழங்கு வதில் கடும் தயக்கம் காட்டி வரு கின்றன. இதுகுறித்து மத்திய அரசு வங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அவ்வமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து செல்லுலார் ஆப் ரேட்டர்கள் சங்கத்தின் பொது இயக்குநர் ராஜன் மேத்யூஸ், தொலைத் தொடர்பு செயலர் அனுஷூ பிரகாஷுக்கு எழுதிய கடிதத்தில், ‘வங்கிகள் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு உதவி கள் வழங்க தயக்கம் காட்டுகின்றன. அந்நிறுவனங்களுக்குப் புதிய கடன் உத்திரவாதங்கள் வழங்க வங்கிகள் மறுக்கின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு தொலைத் தொடர் புத் துறைக்கு உறுதுணையாக இருக்கும் என்பதை வங்கிகளுக் குத் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அதேபோல் தொலைத் தொடர்பு நிறுவனங் களை நெருக்கடியிலிருந்து மீட் டெடுக்கும் வகையில் அலைக் கற்றை பயன்பாட்டுக்கான தொகை யையும், உரிமக் கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் ஒப் பிடுகையில் இந்தியாவில் இணை யக் கட்டணம் மிக மிக குறைவு. சீனா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வருவாய் குறைவு என்பதையும் சுட்டிக்காட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

9 days ago

வணிகம்

9 days ago

வணிகம்

9 days ago

மேலும்