ரூ.1,480 கோடியில் தொழில் துறை ஜவுளி திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By செய்திப்பிரிவு

தேசிய தொழில் துறை ஜவுளிதிட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1,480 கோடியாகும். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் தொழில் துறை துணிகள் உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாக உயரும். இத்தகைய துணி வகைகள் தொழில் துறை பயன்பாடுகளுக்கானதாகும்.

பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தேசியதொழில்நுட்ப ஜவுளி இலக்கு திட்டத்தை நான்கு ஆண்டுகளில் (2020-21 முதல் 2023-24) செயல்படுத்தப் போவதாக அறிவித்தார்.

இத்திட்ட செயலாக்கம் குறித்த விவாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ஜவுளித் துறை அமைச்சர்ஸ்மிருதி இராணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தொழில்நுட்ப ஜவுளி ரகங்களில்பிரதானமானது தொழில் துறைக்கான மூலப்பொருட்களை அவற்றின் செயல்பாட்டுக்கு உதவும்வகையில் உருவாக்கப்படுவதாகும். வேளாண் ஜவுளி, மருத்துவ ஜவுளி, ஜியோ ஜவுளி, பாதுகாப்பு ஜவுளி, தொழில் துறை ஜவுளி, விளையாட்டுத்துறை ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான பயன்பாடுகளைக் கொண்டது.

தொழில்துறை ஜவுளித் துறைவளர்ச்சி அடையும்போது அது சார்ந்த வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்டவை பயனடையும். அத்துடன் ராணுவ பாதுகாப்புக்கான ஜவுளிகள், துணை ராணுவத்தினருக்கான ஜவுளிகள், போலீஸாருக்கான சீருடைகள் உள்ளிட்டவற்றை தரமாக உற்பத்தி செய்யவும் வழியேற்படும். சாலை கட்டமைப்புத் தொழிலிலும் இது பயன்படும்.

தொழில் துறை ஜவுளி சந்தைவாய்ப்பு 2017-18-ம் ஆண்டில் ரூ.1.16,217 கோடி என மதிப்பிடப்பட்டது. 2020-21-ம் ஆண்டில் இது எந்த அளவுக்கு வளர்ச்சியடையும் என மதிப்பிடப்படாவிடினும் இதற்கான சந்தை வாய்ப்பு வளர்ச்சி விகிதத்தைக் கருத்தில் கொண்டு, இத்துறையில் அதிக கவனம் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இருப்பினும் உள்நாட்டு சந்தையில் இதற்கான வாய்ப்பு ரூ.2 லட்சம் கோடியைத் தொடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

41 mins ago

வணிகம்

6 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

மேலும்