தங்கத்தின் விலை குறைந்தது; இன்றைய நிலவரம் என்ன?

By செய்திப்பிரிவு

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மாற்றம், பங்குச் சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இதனால், பங்குச் சந்தை, தொழில் துறை போன்றவற்றை தவிர்த்துவிட்டு, தங்கத்தில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். மற்றொரு புறம் உலக அளவிலும், உள்ளூரிலும் தங்கத்தின் தேவையும் அதிகரித்ததால், தங்கம் விலை உயர்ந்து வந்தது.

பட்ஜெட்டுக்குப் பிறகு தங்கம் விலை சற்று உயர்ந்த நிலையில், தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.22 குறைந்து ரூ.3869-க்கும், பவுன் ரூ.176 ரூபாய் குறைந்து ரூ.30,952-க்கும் விற்பனையாகிறது. அதே போல சுத்தத் தங்கமான 24 காரட், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.32,496-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் குறைந்தது
வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 20 பைசா குறைந்து ரூ.49.80-க்கு விற்பனையாகிறது. அதாவது 1 கிலோ வெள்ளி 49,800 ரூபாய்க்கு இன்று விற்பனை ஆகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

21 mins ago

வணிகம்

14 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்