உபர் ஈட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது சொமாட்டோ

By செய்திப்பிரிவு

உபர் ஈட்ஸ் நிறுவனத்தின் இந்திய வர்த்தகங்களை சொமாட்டோ நிறுவனம் வாங்கியுள்ளது.

இதன் மூலம் உபர் ஈட்ஸ் இந்தியா நிறுவனத்தின் நேரடி உணவகங்கள், டெலிவரி கூட்டாளிகள், உபர் ஈட்ஸ் ஆப் வாடிக்கையாளர்கள் சொமாட்டோ உணவு டெலிவரி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. செவ்வாயான இன்று முதல் இது அமலுக்கு வருகிறது.

இதன் மூலம் உபர் ஈட்ஸ் நிறுவனத்தின் இந்திய வர்த்தகங்கள் சொமாட்டோவுக்குக் கைமாறியுள்ளது.

ஆன்லைன் வர்த்தக பெரிய நிறுவனமான அலிபாபாவுடன் தொடர்புடைய ஆன்ட் பைனான்சியல் நிறுவனத்திடமிருந்து சொமாட்டோ நிறுவனம் 150 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதையடுத்து இந்த டீல் நிறைவு பெற்றது.

சொமட்டோ தலைமைச் செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் தன் ட்விட்டர் பக்கத்தில், "உபர் ஈட்ஸ் இந்தியா இனி சொமாட்டோ" என்று உற்சாகமாக அறிவித்துள்ளார்.

2017-ம் ஆண்டு இந்தியாவில் நுழைந்த உபர் ஈட்ஸ் பட்டியலில் 41 நகரங்களின் 26,000 உணவகங்கள் இருந்தன. இந்நிலையில் இந்தக் கையகப்படுத்தல் குறித்து உபேர் ஈஸ் நிர்வாகத்திற்கும் சொமாட்டோவுக்கும் நீண்ட காலம் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.

சொமாட்டோ, ஸ்விக்கியிடமிருந்து கடும் போட்டியை எதிர்கொண்ட உபர் ஈட்ஸ் நிறுவனம் கடும் நஷ்டங்களைச் சந்தித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

வணிகம்

12 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்