கடந்த வாரம் அமெரிக்க அரசு, ஈரானின் முக்கிய தளபதிகளில் ஒருவரான காசிம் சுலைமானியை ஏவுகனை தாக்குதல் நடத்திக் கொன்றது. அதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பதற்றச் சூழல் அதிகரித்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட அன்றைய தினமே உலகளாவிய பொருளாதார சந்தையில் மாற்றம் ஏற்பட்டது.
உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மத்திய கிழக்குப் பகுதிகளில் இருந்தே பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால், கச்சா எண்ணெய் மதிப்பு அன்றைய தினம் 4 சதவீதம் அளவில் உயர்வைக் கண்டது. அதேபோல் தங்கத்தின் மதிப்பும் அதிகரித்தது.
இந்தநிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. பெய்ரூட் கச்சா எண்ணெய் சந்தையில் பீப்பாய் கச்சா எண்ணெய் 68.09 டாலரில் இருந்து 67.86 டாலராக குறைந்துள்ளது. அதாவது வெறும் 82 சென்ட் என்ற அளவில் விலை குறைந்துள்ளது.
எனினும் இந்திய சந்தையில் பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்ந்தே காணப்படுகிறது. சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 5 காசு அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.78.69 ஆக உயர்ந்துள்ளது.
டீசல் நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.72.69 ஆகவும் உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சற்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago