நாட்டின் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி தொடர்ந்து 4-வது மாதமாக நவம்பர் மாதத்தில் 1.5 சதவீதமாகச் சுருங்கியுள்ளது. 8 துறைகளில் 5 துறைகள் எதிர்மறையான வளர்ச்சியை அடைந்துள்ளன என்று மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 8 முக்கியத் துறைகளின் உற்பத்தி தொடர்ந்து எதிர்மறையான வளர்ச்சியில் இருந்து வருகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இதே காலகட்டத்தில் 8 துறைகளின் உற்பத்தி என்பது 3.3 சதவீதமாக இருந்தநிலையில், இப்போது 1.5 சதவீதமாகச் சுருங்கிவிட்டது.
மின் உற்பத்தி, உருக்கு, நிலக்கரி, சிமெண்ட், உரங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், கச்சா பெட்ரோலிய எண்ணெய், இயற்கை நிலவாயு ஆகிய முக்கிய 8 துறைகளில் உற்பத்தியானது செப்டம்பர் மாதம் 5.2% அளவுக்குச் சுருங்கியது. கடந்த 14 ஆண்டுகளில் இப்படி நேரிட்டதில்லை.
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உருக்கு, மின்சார உற்பத்தி ஆகியவை எதிர்மறையான வளர்ச்சியைப் பெற்றுள்ளன. நவம்பர் மாதத்தில் சிமெண்ட் உற்பத்தி 4.1 சதவீதமாக இருக்கிறது. இது கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் 8.8 சதவீதமாக இருந்தது. இருப்பினும் கட்டமைப்புத் துறையில் ஓரளவுக்கு வளர்ச்சி இருப்பதை சிமெண்ட் உற்பத்தி குறிப்பிடுகிறது.
அதேசமயம், எண்ணெய் சுத்திகரிப்பு பொருட்கள் 3.1 சதவீதமும், உரம் உற்பத்தி 13.6 சதவீதமும் அதிகரித்துள்ளது. நாட்டில் பருவ மழைக்குப் பின் ராபி பருவ விவசாயம் தீவிரமடைந்து இருப்பதால், உரத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே உரத்தின் உற்பத்தி உயர்ந்துள்ளது தெரிகிறது. அதேபோல, சுத்திகரிப்புத் துறையிலும் 3.1 சதவீதம் வளர்ச்சி இருப்பது ஓரளவுக்கு ஏற்றுமதி, இறக்குமதி நடைபெறுவதைக் காட்டுகிறது.
ஆனால், நிலக்கரி உற்பத்தியில் தொடர்ந்து மந்தநிலை நீடிப்பது இன்னும் உற்பத்தித் துறை இன்னும் வேகமெடுக்கவில்லை என்பதையே காட்டுகிறது. மேலும், உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மின் நுகர்விலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது
ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் முக்கிய தொழில்துறை வளர்ச்சி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து 5.1 சதவீதமாக அளவிலேயே எந்தவிதமான வளர்ச்சியும் இல்லாமல் இருக்கிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
54 mins ago
வணிகம்
10 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago