ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச கட்டாய ரீசார்ஜ் கட்டணத்தை ரூ.23 லிருந்து ரூ.45 ஆக உயர்த்தி 95 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதாவது ஏர்டல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் இதற்கு முன் மாதத்துக்குக் குறைந்தபட்சமாக ரூ.23 ரீசார்ஜ் செய்த நிலையில் இனிமேல் குறைந்தபட்சமாக ரூ.45 அல்லது அதற்கு மேல்தான் ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், 23 ரூபாய் திட்டத்தில் கிடைத்த அதேசலுகைகள்தான் 45 ரூபாய் திட்டத்திலும் கிடைக்கும். அதில் மாற்றம் ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ரூ.45 ரீசார்ஜ் கட்டணத்தில் எஸ்டிடி வாஸ்காலிங் நொடிக்கு 2.5 பைசாவாகவும், தேசிய அளவில் வீடியோ காலிங் கட்டணம் வினாடிக்கு 5 பைசாவாகவும் கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு எம்.பி. டேட்டாவுக்கு 50 பைசாவும், லோக்கல் எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ஒரு ரூபாயும், தேசிய அளவில் ரூ.1.5 பைசாவும் நிர்ணயிக்கப்படும். இந்த 45 ரூபாய் திட்டத்தின் காலம் 28 நாட்கள் மட்டுமே.
இந்த திட்டம் கடந்த 29-ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துவிட்டதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு இனிமேல் 23 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் பொருந்தாது. அவ்வாறு ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் 15 நாட்களுக்குப் பின் தானாகவே இணைப்பு துண்டிக்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago