யாரும் வாங்க முன்வரவில்லை எனில் ஏர் இந்தியாவை 6 மாதங்களில் மூட நேரிடும்

By செய்திப்பிரிவு

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அரசுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கு எந்த நிறுவனமும் முன் வரவில்லை என்றால் 6 மாதங்களில் இந்நிறுவனத்தை மூட வேண்டிய சூழல் ஏற்படும் என்று நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு தற்போது ரூ.60 ஆயிரம் கோடிஅளவுக்கு கடன் சுமை உள்ளது.இந்நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்நிறுவனத்தில் முதலீடுசெய்யவோ, பங்குகளை வாங்கவோ எந்த ஒரு நிறுவனமும் தயாராக இல்லை.

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இந்நிறுவனத்தை வாங்குவதற்கு எந்த நிறுவனமும் முன்வராவிடில் இந்நிறுவனத்தை மூடுவதைத் தவிர வேறு ஏதும் வழி இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிறுவனத்தை தனியார்மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதால், இதில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அரசு முன்வரவில்லை. இருப்பினும் ஒருவழியாக தட்டுத் தடுமாறி இந்நிறுவனம் செயல்பட்டு வரு கிறது. ஆனால் இது நீண்ட காலம் நீடிக்காது என்று அவர் குறிப்பிட்டார்.

2011-12-ம் நிதி ஆண்டிலிருந்து இதுவரை இந்நிறுவனத்தில் அரசு ரூ.30,520 கோடியை முதலீடுசெய்துள்ளது. அன்றாட செயல்பாட்டுக்கு ரூ.2,400 கோடிக்குஅரசு உத்தரவாதம் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அரசு ரூ.500 கோடிக்கு மட்டுமே உத்திரவாதம் அளித்துள்ளது.

இப்போது உள்ள சூழ்நிலையின்படி நிறுவனத்தை மேலும் 6 மாதங்களுக்கு செயல்படுத்த முடியும். அதற்குள் எவரும் வாங்க முன்வரவில்லையெனில் ஏர் இந்தியாவுக்கு மூடு விழா நடத்துவதைத் தவிர வேறு வழி இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

மேலும்