கடும் நிதிச் சுமையில் இருக்கும் ஏர் இந்தியா நிறுவனம், சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளுக்கு விமான டிக்கெட்டுகளை கடனில் வழங்குவதை நிறுத்தி உள்ளது.
அரசு அமைப்புகள் தொழில்சார் பயணங்களுக்கு ஏர் இந்தியாவைப் பயன்படுத்துகின்றன. இவ்வமைப்புகளுக்கு ஏர் இந்தியா பயணச்சீட்டுகளுக்கான தொகை உடனே வசூலிக்காமல் கடனில் வழங்கி வந்தது.
ஆனால் அரசு அமைப்புகள் உரிய நேரத்தில் பயணச்சீட்டுகளுக்கான தொகையை செலுத்தாமல் கடன்பாக்கி வைத்துள்ளன. இந்நிலையில் ரூ.10 லட்சத்துக்குமேல் கடன்பாக்கி வைத்துள்ள அரசு நிறுவனங்களுக்கு இனி கடனில் டிக்கெட் வழங்கப்படாது என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை, எல்லை பாதுகாப்பு படை, இந்திய தணிக்கை வாரியம் உள்ளிட்ட அரசு அமைப்புகள் ஒவ்வொன்றும் ஏர் இந்தியாவிடம் ரூ.10 லட்சத்துக்கும்மேல் கடன்பாக்கி வைத்துள்ளன. இந்நிலையில் இவ்வமைப்புகளுக்கு கடனில் பயணச்சீட்டு வழங்க மறுத்துள்ளது. மொத்தமாக அரசு அமைப்புகள் பயணச்சீட்டு தொடர்பாக ஏர் இந்தியாவுக்கு ரூ.260 கோடி கடன்பட்டுள்ளன.
அரசு விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. 2018-19-ம் ஆண்டில் ரூ.8,550 கோடி அளவில் நஷ்டத்தை சந்தித்து உள்ளது. தவிர, இந்நிறுவனத்துக்கு ரூ.60,000 கோடி கடன் உள்ளது. மத்திய அரசு ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
வணிகம்
3 hours ago
வணிகம்
6 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago