ஜிஎஸ்டி கணக்குகள் தாக்கல் செய்வதில் காலம் தாழ்த்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மறைமுக மற்றும் சுங்கவரி வாரியம் (சிபிஐசி) ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இனி உரிய நேரத்தில் ஜிஎஸ்டி கணக்குகள் தாக்கல் செய்யாமல் இருக்கும் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள், சொத்துகள் முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்வதில் பல நிறுவனங்கள் காலம் தாழ்த்திவருகின்றன. அந்நிறுவனங்களுக்கு பலமுறை எச்சரிக்கை கொடுக்கப்பட்டாலும், அவை வரி கணக்குகளை தாக்கல் செய்வதில் அலட்சியம் காட்டிவருகின்றன.
இந்நிலையில் இத்தகைய நிறுவனங்களின் சொத்துகளை, வங்கிக் கணக்குகளை முடக்கலாம் என்று மத்திய மறைமுக மற்றும் சுங்கவரி வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சிபிஐசி, சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவுக்கு மூன்று நாட்கள் முன்னதாக அந்நிறுவனங்களுக்கு அறிவிப்பு அனுப்பபடும்.
அந்தக் காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யாத நிறுவனங்களுக்கு, காலக்கெடு முடிந்து 5 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை தகவல் அனுப்பப்படும். அதன்பிறகும் அவை அலட்சியமாக இருக்கும் பட்சத்தில், அந்நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
49 mins ago
வணிகம்
1 hour ago
வணிகம்
3 hours ago
வணிகம்
6 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago