ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிதி மோசடி வழக்கு- 3 மதிப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சம் அபராதம்: பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனத்தை மதிப்பீடு செய்த மூன்று நிறுவனங்கள் மீது பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் ரூ.25 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மதிப்பீடு செய்வதில் அலட்சியமாக இருந்ததாகவும், காலம் தாழ்த்தியதாகவும் கூறப்பட்ட நிலையில் அந்நிறுவனங்கள் மீது அபரதாம் விதிக்கப்பட்டுள்ளது.

இக்ரா, கேர் மற்றும் இந்தியா ரேட்டிங்ஸ் ஆகிய மூன்று மதிப்பீட்டு நிறுவனங்கள் ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனத்தை மதிப்பீடு செய்தன. மாற்ற முடியாத கடனீடுகள் (என்சிடி) தொடர்பான மதிப்பீட்டில் இந்நிறுவனங்கள் மிகக் கவனக்குறைவாக நடந்துள்ளன என செபி குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் ‘செபி’ இம்மூன்று நிறுவனங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

இதுகுறித்து செபி வெளிட்ட அறிவிப்பில், ‘ஐஎல் அண்ட் எஃப்எஸ் மற்றும் அதன் குழும நிறுவனங்களின் நிதி நிலைகள், இம்மூன்று மதிப்பீட்டு நிறுவனங்கள் அளித்த அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதுபோல் ஸ்திரமானதாக இல்லை. இம்மதிப்பிட்டு நிறுவனங்கள் ஐஎல் அண்ட் எஃப்எஸ்-ன் மாற்ற முடியாத கடனீடுகள் சார்ந்து கவனமான மதிப்பீட்டை மேற்கொள்ளத் தவறியுள்ளன. மிக மந்தமாகவும், அலட்சியமாகவும் அக்கணக்குளை கையாண்டு உள்ளன’ என்று குறிப்பிட்டு உள்ளது. அதேசமயம் உள்நோக்கத்துடன் இந்தத் தவறுகள் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, இந்நிறுவனங்கள் பொறுப்புடன் செயல்படவில்லை என்பதே குற்றச்சாட்டு என செபி தெரிவித்துள்ளது.

ஒரு நிறுவனத்தைப் பற்றிய நம்பிக்கை அந்நிறுவனம் மீதான தரமதிப்பீடுகளின் வழியாகவே உருவாகிறது. இந்நிலையில் மதிப்பீடு செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிசாரா நிதி நிறுவனமான ஐஎல் அண்ட் எஃப்எஸ் கடந்த ஆண்டு கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளானது. அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதன் இயக்குநர்கள் நிதி மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் அந்நிறுவனத்தை தணிக்கை செய்த நிறுவனங்களும், மதிப்பீடு செய்த நிறுவனங்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டன.

ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனத்துக்கு ரூ.91,000 கோடிக்கும் மேலாக கடன் உள்ளது. உள்கட்டமைப்புத் திட்டங்கள் சார்ந்து கடன் உதவி வழங்கி வந்த இந்நிறுவனம், அதற்குத் தேவையான நிதியை மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களிடமிருந்து வாங்கி வந்தது. வங்கிகளிடமிருந்து மட்டும் ரூ.57,000 கோடி கடன் வாங்கியது.

இந்நிலையில் ஐஎல் அண்ட் எஃப்எஸ்-ன் நிர்வாக குளறுபடிகள் உள்ளிட்ட காரணங்களால் அந்நிறுவனம் அளித்த கடன்கள் திரும்பி வராமல் போயின. இதனால் நிறுவனம் திவால் நிலைக்கு ஆளானது. விளைவாக இந்நிறுவனத்துக்கு கடன் அளித்த வங்கிகளும் கடும் பாதிப்பைச் சந்தித்தன. ஐஎல் அண்ட் எஃப்எஸ்-ல் ஏற்பட்ட நிதி நெருக்கடி இந்தியச் சந்தையை பெருமளவில் பாதித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

20 mins ago

வணிகம்

48 mins ago

வணிகம்

3 hours ago

வணிகம்

5 hours ago

வணிகம்

8 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்