மாருதி சுசூகி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜெகதீஷ் கட்டார் மீது மத்திய புலானய்வுத் துறை மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.110 கோடி அளவில் மோசடி செய்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் சிபிஐ இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் ஜெகதீஷ் கட்டார் மீது சிபிஐ கடந்த 20-ம் தேதி வழக்குப் பதிவு செய்தது. இந்த மோசடி வழக்கின் அவரோடு சேர்த்து மேலும் சில பொதுத் துறை ஊழியர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய ஜெகதீஷ் கட்டார், மாருதி சுசூகி நிறுவனத்தில் 1993-ம் ஆண்டு சந்தைப் பிரிவு இயக்குநராக பணியில் சேர்ந்தார். அதன் பிறகு 1999-ம் ஆண்டு நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றர். 2007-ம் ஆண்டு மாருது சுசூகி நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற அவர், மறு ஆண்டே கார்னேஷன் ஆட்டோ என்ற வாகனவிற்பனை நிறுவனத்தை தொடங்கினார். இந்நிலையில் 2009-ம் ஆண்டுநிறுவனச் செயல்பாடுகளுக்கென பஞ்சாப் நேஷனல் வங்கியிடமிருந்து ரூ.170 கோடி கடன் பெற்றுள்ளார். அந்தக் கடனை அவர்முறையாக செலுத்தாத நிலையில் 2015-ம் வங்கி, அந்தக் கடன் தொகையை வாராக் கடனாக அறிவித்தது.இந்நிலையில் கடன் வாங்கஅடமானமாக காட்டிய சொத்துகளை வங்கியின் அனுமதியின்றி விற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மீது வழங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago