பட்ஜெட்டுக்கு முன்பு மேலும் சீர்த்திருத்தம்: நிர்மலா சீதாராமன் உறுதி

By செய்திப்பிரிவு

2020-ம் ஆண்டு பட்ஜெட்டுக்கு முன்பாக மேலும் பல சீர்த்திருத்த நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாகக் குறைந்தது. ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து 10 மாதங்களாக விற்பனைக் குறைவு, வேலையின்மை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை நாடு எதிர்கொண்டு வருகிறது. 2-வது காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்தநிலையில், இந்திய – ஸ்வீடன் வர்த்தக மாநாடு டெல்லியில் இன்று நடைபெற்றது. ஸ்வீடன் நாட்டில் இருந்து வந்துள்ள வர்த்தக பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:

பொருளாதார நெருக்கடியை தீர்க்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2020-ம் ஆண்டு பட்ஜெட்டுக்கு முன்பாக மேலும் பல சீர்த்திருத்த நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம். கார்ப்பரேட் வரியை ஏற்கெனவே குறைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல சீர்த்திருத்தங்களை எதிர்பார்க்கலாம்.’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

11 days ago

வணிகம்

11 days ago

மேலும்