3 மாதங்களுக்குப் பின் நவம்பர் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.ஒரு லட்சம் கோடியை எட்டியது

By ஐஏஎன்எஸ்

கடந்த 2 மாதங்களாகக் குறைந்திருந்த நிலையில், நவம்பர் மாத சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ.1.03 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருந்த ஜிஎஸ்டி வரி வருவாயைக் காட்டிலும் 6 சதவீதம் அதிகமாகும்.

உள்நாட்டுப் பரிமாற்றங்கள் மூலம் கிடைக்கும் ஜிஎஸ்டி வரிவருவாய் நவம்பர் மாதத்தில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், இறக்குமதி மூலம் கிடைக்கும் ஜிஎஸ்டி வருவாய் மைனல்13 சதவீதத்தில் இருக்கிறது.

இதுகுறித்து நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், "நவம்பர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ. ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 492 கோடியாகும். இதில் மத்திய அரசு ஜிஎஸ்டி வரி ரூ.19 ஆயிரத்து 592 கோடி. மாநில ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.27 ஆயிரத்து 144 கோடியாகும், மத்திய,மாநில ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.49 ஆயிரத்து 28 கோடியாகும். இதில் கூடுதல் வரி (செஸ்) ரூ.7 ஆயிரத்து 727 கோடியாகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டிஆர் 3பி ரிட்டன் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் 30-ம் தேதி வரை 77.83 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர்.

2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரிவருவாய் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 8-வது முறையாக வரிவசூல் ரூ.ஒருலட்சம் கோடியைத் தாண்டுகிறது. நடப்பு ஆண்டு நவம்பர் மாதத்தில்தான் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த 2 ஆண்டுகளில் அதிக அளவு வசூலிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE