தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2019- 2020-ம் நிதியாண்டில் செப்டம்பர் மாதம் வரையிலான முதல் அரையாண்டில் ரூ. 151.07 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநர் குழு கூட்டம் தூத்துக்குடியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2019- 2020-ம் ஆண்டில் 30.09.2019 வரையிலான முதல் அரையாண்டுக்கான தணிக்கை முடிவுகள் இறுதி செய்யப்பட்டன.
வங்கியின் தணிக்கை செய்யப் பட்ட நிதிநிலை அறிக்கையை, வங்கியின் தலைவர் எஸ்.அண்ணாமலை மற்றும் இயக்குநர்கள் முன்னிலையில், வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி.ராமமூர்த்தி வெளியிட்டார். அதன் விவரம்:2019- 2020-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் வங்கியின் மொத்த வணிகம் 11.70 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ. 60,852.48 கோடியை எட்டியுள்ளது. வைப்புத் தொகை ரூ.34,068.80 கோடி, கடன்கள் ரூ.26,783.69 கோடி. நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்கு தொகை 14.4 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.8,728.59 கோடியாக உள்ளது.
முன்னுரிமைத் துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன் ரூ.15,279.81 கோடியில் இருந்து, ரூ.17,442.95 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 14.16 சதவீதம். விவசாயத்துறைக்கு ரூ.6,342.18 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறைக்கு வழங்கப்பட்டுள்ள கடன் ரூ. 9137.61 கோடியில் இருந்து ரூ.10,241.71 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 12.08 சதவீதம். வங்கியின் வட்டியில்லா வருமானம் ரூ.229.27 கோடி. வங்கியின் இயக்கச் செலவு ரூ.423.89 கோடி. வங்கியின் செயல்பாடு லாபம் ரூ.411.24 கோடியில் இருந்து ரூ.440.07 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர லாபம் ரூ.151.07கோடி. நிகர வட்டி வருமானம் ரூ.616.81 கோடியில் இருந்து ரூ.634.63 கோடியாக உயர்ந்துள்ளது.
2019-2020-ம் நிதியாண்டின் 2-ம் அரையாண்டில் மொத்த வணிகம் ரூ.72,500 கோடியாகவும், வைப்புத் தொகை ரூ.41,000 கோடியாகவும், கடன் ரூ.31,500 கோடியாகவும், நடப்பு, சேமிப்புக் கணக்குத் தொகை ரூ.10,500 கோடியாகவும், நிகர லாபம் ரூ.360 கோடியாகவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago