ரூ.3,80,700 கோடி சொத்து மதிப்பு: இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம் 

By செய்திப்பிரிவு

மும்பை, பிடிஐ

தொடர்ந்து 8வது ஆண்டாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக ஐ.ஐ.எஃப்.எல். பட்டியலில் திகழ்கிறார்.

ஐஐஎஃப்எல் வெல்த்-ஹரூன் இந்தியா செல்வந்தர்கள் பட்டியலில் ரூ.3,80,700 கோடியுடன் முகேஷ் அம்பானி முதலிடம் வகிக்கிறார்.

இந்தப் பட்டியலின்படி 25 இந்தியப் பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு இந்திய ஜிடிபியில் 10% ஆகும், 953 செல்வந்தர்களின் சொத்து மதிப்பு இந்திய ஜிடிபியில் 27% ஆகும்.

லண்டனைச் சேர்ந்த ஹிந்துஜா&குடும்பத்தினரின் சொத்துமதிப்பு 1,86,500 கோடியுடன் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளனர், 3வது இடத்தில் விப்ரோவின் அசிம் பிரேம்ஜி ரூ.117,500 கோடி சொத்து மதிப்புடன் இருக்கிறார்.

அதேபோல் 2018-ல் ரூ.1000 கோடிக்கும் மேல் சொத்துமதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 831 ஆக இருந்தது இந்த ஆண்டு 953 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டின் படி இந்தியாவின் பில்லியனர்கள் எண்ணிக்கை 141லிருந்து 138 ஆகக் குறைந்துள்ளது.

ஆர்சலர் மிட்டலின் சி.இ.ஓ., எல்.என்.மிட்டலின் சொத்து மதிப்பு ₹1,07,300 கோடி, இவர் 4ம் இடத்தில் உள்ளார். கவுதம் அதானி ரூ.94,500 கோடியுடன் 5வது இடத்தில் இருக்கிறார்.

டாப் 10-ல் உள்ள மற்றவர்கள் விபரம் வருமாறு:

உதய் கோடக் (94,100 கோடி) 6வது இடம், சைரஸ் எஸ்.பூனாவாலா 7வது இடம் (₹88,800 கோடி), சைரஸ் பலோஞி மிஸ்ட்ரி 8வது இடம் (₹76,800 கோடி), ஷபூர் பலோன்ஜி 9வது இடம் (₹76,800 கோடி), திலிப் ஷங்வி 10வது இடம் (ரூ. 71,500-கோடி).

பட்டியலில் உள்ள 26% அதாவது, 246 நபர்கள் மும்பையில் உள்ளனர், புதுடெல்லியில் 175 செல்வந்தர்களும், பெங்களூருவில் 77 செல்வந்தர்களும் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

16 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்