இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகவும் பலவீனமாக இருக்கிறது: ஐஎம்எப் கவலை

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்,

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நாங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகவும் பலவீனமாக இருக்கிறது என்று சர்வதேச நிதியம்(ஐஎம்எப்) கவலை தெரிவித்துள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்கள், சுற்றுசூழல் போன்றவற்றை ஒழுங்குபடுத்துவதில் நிச்சயமற்ற சூழலும், வங்கி அல்லாத நிறுவனங்கள் பலவீனமான நிலையில் இருப்பதுவுமே காரணம் என்று ஐஎம்எப் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரவளர்ச்சி ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 5 சதவீதமாகக் குறைந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் பொருளாதார வீழ்ச்சியால் ஐஎம்எப் இந்தியா குறித்ததனது வளர்ச்சிக் கணிப்பை மாற்றியுள்ளது.

வாஷிங்டனில் நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் ஐஎம்எப் செய்தித்தொடர்பாளர் கெரி ரைஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியாவின் வளர்ச்சி குறித்து புதிய கணிப்புகளை வைத்திருக்கிறோம் அதை வெளியிட இருக்கிறோம். ஆனால், இந்தியாவின் சமீபத்திய பொருளாதார வளர்ச்சி நாங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் பலவீனமாக இருக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்கள், சுற்றுச்சூழல் ஒழுங்குபடுத்துதல் போன்றவற்றில் நிலையற்றதன்மை இருப்புதும், வங்கி அல்லாத நிறுவனங்கள் பலவீனமான நிலையில் இருப்பதுவுமே பொருளாதார சரிவுக்கு காரணம் என்று நாங்கள் கருதுகிறோம்.
இருந்தாலும், உலக அளவில் இந்தியா இன்னும் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருக்கிறது.

தொடர்ந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஐஎம்எப் கண்காணிக்கும்.உலகப் பொருளாதார கண்ணோட்டத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து எங்கள் கருத்தை பதிவு செய்வோம். " எனத் தெரிவித்தார்

நடப்பு நிதியாண்டுக்கான (2019-20) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 7.03 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் ஐஎம்எப் குறைத்துள்ளது. 2021-ம் ஆண்டில்தான் இந்தியாவி்ன் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக வளர்வதற்கு வாய்ப்புள்ளது என ஐஎம்எப் தெரிவித்துள்ளது.

ஆனால், ஐஎம்எப் முன்பு வெளியிட்ட கணிப்பில் 2021-ம் ஆண்டில் 7.5 சதவீதமாக வளர்ச்சி இருக்கும் என்று மதிப்பிட்டிருந்தது.

ஏஎன்ஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

மேலும்