பருவநிலை மாற்றத்தினால் இந்தியாவில் வாழை விளைச்சல் குறையலாம்: ஆய்வில் தகவல்

உலகிலேயே அதிக வாழை விளைச்சல் கொண்ட நாடான இந்தியா பருவநிலை மாற்றத்தினால் வரும் காலத்தில் குறைந்த விளைச்சல் காண நேரிடலாம் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவிவெப்படமடைதலின் நேர்மறை பலனாக கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் வாழை விளைச்சல் ஹெக்டேருக்கு 0.024 டன்கள் அதிகரித்தது. ஆனால் தொடர்ந்து புவிவெப்பமடைந்து கொண்டே வருவதால் விளைச்சல் 2050-ம் ஆண்டுவாக்கில் ஹெக்டேருக்கு 0.59-0.19 டன்கள் குறைய வாய்ப்புள்ளதாக 'நேச்சர் கிளைமேட் சேஞ்ச்’-இல் வெளியான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 பிற நாடுகளுடன் இந்தியா வாழை விளைச்சல் மற்றும் நுகர்வில் மிகப்பெரிய இடத்தில் உள்ளது. பிரேசிலும் இந்தப் பட்டியலில் உள்ளது, ஆனால் புவிவெப்படமடைதல் இன்னும் அதிகரிப்பதால் இந்த நாடுகளில் வாழை விளைச்சலும் முன்பை விட குறையும் என்று எக்ஸீட்டர் பல்கலைக் கழக ஆய்வு தெரிவித்துள்ளது.

ஆனால் இதே வேளையில் ஈக்வடார், ஹோண்டுராஸ், ஆப்ரிக்காவில் சில நாடுகளில் பயிர் விளைச்சல் அதிகமாகும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

புவிவெப்பமடைதலால் குறையும் வாழை விளைச்சலை வலுவான தொழில் நுட்பம் கொண்டு மாற்ற முடியும் என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளது இந்த ஆய்வு.

உணவு மற்றும் வேளாண் அமைப்பு புள்ளிவிவரங்களின் படி 2010-ம் ஆண்டு முதல் 2017- ம் ஆண்டு வரை ஆண்டொன்றுக்கு 29 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்து வாழை விளைச்சலில் இந்தியா நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. உலகில் மொத்த வாழை உற்பத்தியில் 29% இந்தியாவில்தான் விளைகிறது.

இந்தியாவில் வாழை விளைச்சல் சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 60 டன்கள். இதே காலக்கட்டத்தில் வாழை விளைச்சலில் இரண்டாம் இடத்தில் உள்ள சீனா, இந்தியாவை விட மூன்றில் ஒரு பங்கு குறைந்த விளைச்சல் கண்டு ஆண்டுக்கு 11 மில்லியன் டன்கள் விளைச்சல் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE