பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவ னங்களின் இயக்குநர் குழுவில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்கு நராவது இருக்க வேண்டும் என்று செபி விதிமுறை வகுத் திருக்கிறது. இந்த விதிமுறையை செயல்படுத்தாத 530 நிறுவனங் களுக்கு பிஎஸ்இ அபராதம் விதித்திருக்கிறது.
பெண் இயக்குநர்களை நியமிப் பதற்கான காலக்கெடு கடந்த ஏப்ரல் 1-ம் தேதியுடன் முடிவடைந்தது. செபி விதிமுறைகளின்படி 530 நிறுவனங்களுக்கு (ஜூலை 13 வரை) அபராதத்துக்கான கடிதம் அனுப்பி இருப்பதாக தனது அறிக்கையில் பிஎஸ்இ தெரிவித்திருக்கிறது.
மும்பை பங்குச்சந்தையில் 5,711 நிறுவனங்கள் பட்டியலிடப் பட்டுள்ளன. இதில் 530 நிறுவனங் களில் பெண் இயக்குநர்கள் நியமிக்கப்படவில்லை. ஆனால் 530 நிறுவனங்களின் பெயர்களை பிஎஸ்இ வெளியிடவில்லை. தேசிய பங்குச்சந்தையும் (என்எஸ்இ) 260 நிறுவனங்களுக்கு அபராதம் விதித்திருக்கிறது. இதில் பெரும்பாலான நிறுவனங்கள் பிஎஸ்இயிலும் பட்டியலிடப்பட்டுள்ளன.
பிரைம் டேட்டா பேஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சிபடி முக்கியமான சில நிறுவனங்களில் கூட பெண் இயக்குநர்கள் நியமிக்கப்படவில்லை. ஆதித்யா பிர்லா கெமிக்கல்ஸ், நிசான் காப்பர், பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மகாராஷ்ட்ரா உள்ளிட்ட நிறுவனங்களில் பெண் இயக்குநர்கள் இல்லை.
அபராதம் விதிப்பது நல்லதாக இருந்தாலும் இந்த அபராதம் போதுமானதாக இல்லை என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ஒரு வேளை தற்போதைய நிலையில் அபராதம் செலுத்த வேண்டும் என்றால் ரூ.63,000 மட்டும் செலுத்தினால் போதுமானது. பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை பொறுத்தவரை இது மிகவும் சிறிய தொகை ஆகும். இந்த தொகையை செலுத்துவதினால் நிறுவனங்களின் வரவு செலவில் பெரிய பாதிப்பு ஏற்படாது. செபி இன்னும் கடுமையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
பெண் இயக்குநர்கள் நியமிக் கப்படவில்லை என்றால் அந்த நிறுவன பங்குகளின் வர்த்தகத் துக்கு தடை விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இயக்குநர் குழுவில் நியமிக்கும் அளவுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் இல்லை என்பது நிறுவனங்களின் வாதமாக இருக்கிறது. பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது மனைவி, மகள் உள்ளிட்ட உறவுகளையே இயக்குநர் குழுவில் நியமனம் செய்தார்கள்.
பெண் இயக்குநர் குழு பிரச்சினை என்பது இந்தியாவில் மட்டும் இல்லை. உலகின் 200 பெரிய நிறுவனங்களில் ஐந்தில் ஒரு நிறுவனத்தில் பெண் இயக்குநர்கள் நியமிக்கப்படவில்லை.
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago