இன்று ரிஸ்க்கைப் பற்றி பலர் கவலைப்படுவதில்லை. முதலீட்டில் கிடைக்கும் ரிடர்ன்ஸ், பெரும்பாலும் ஒருவர் எடுக்கக்கூடிய ரிஸ்க்கைச் சார்ந்ததே.
முதலீடு என்றவுடன் எல்லோ ருக்கும் மனதில் உள்ளவை, வைப்பு நிதி வங்கி மற்றும் போஸ்ட் ஆபீசில், தங்கம், ரியல் எஸ்டேட், லைப் இன்சூரன்ஸ், சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இதில் என்ன ரிஸ்க் உள்ளது, நாம் அதை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறோம் என்று பார்ப்போம்.
வைப்பு நிதி:
நம் முதலீடு பாதுகாப்பானது, வட்டி விகிதம் மாறக்கூடியது, நம் பணம் முதிர்வு பெற்ற பின்பு, எந்த வங்கியில் திரும்ப முதலீடு செய்ய வாய்ப்பு இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. அதில் போடும் பணத்திற்கு வருமான வரி விலக்கு கிடையாது. நடுவில் எடுத்தால் 1% வரை நம் முதலீட்டில் கொடுக்க வேண்டி வரும்.
ரிஸ்க்: குறுகிய முதலீடு நல்லது. 3 வருடம், 5 வருடம் மற்றும் அதற்கும் மேல் என்று வைத்திருப்பது அதிகம் ரிஸ்க்.தங்கம்: இந்தியாவில் எல்லோராலும் குறிப்பாக அனைத்துப் பெண்களாலும் விரும்பப் படுகிறது. கடந்த 5 வருடங்களில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
தங்கம்:
இந்தியாவில் எல்லோராலும் குறிப்பாக அனைத்துப் பெண்களாலும் விரும்பப் படுகிறது. கடந்த 5 வருடங்களில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
ரிஸ்க்: இவ்வளவு காலம் நம்முடைய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்தது. இப்போது ஒரு டாலரின் மதிப்பு 59 ரூபாய். இன்னும் குறையும் என்று சொல்லப்படுகிறது. தங்கத்தில் வேறு டிசைன் மாற்றும்போது நமக்கு 20% வரை இழப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும் ஒரு கடையில் வாங்கும் தங்கத்தை மற்றவர்கள் அதே விலைக்கு வாங்கிக் கொள்வதில்லை; அப்படி என்றால் எல்லா தங்கமும் ஒரே தரத்தில் இல்லை என்றுதானே பொருள். எல்லாம் ஒரே தரமாக இருந்தால் எப்படி சில கடையில் தங்கத்தின் விலையை விடக் குறைவாகத் தரமுடியும்? சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம்..
லைப் இன்சூரன்ஸ்:
சம்பாதிக்கும் ஒரு குடும்பத் தலைவர் இறந்தால் ஏற்படும் பொருளாதார இழப்பை நாம் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மாற்றிவிட்டால் நம்முடைய குடும்பம் பாதுகாப்பாக இருக்கும். இன்சூரன்ஸில் எந்த ஒரு திட்டமும் 3 வருடமோ அல்லது 5 வருடமோ கிடையாது. பெரும்பாலும் 20 வருடமும் அதற்கும் மேல்.
ரிஸ்க்: இதை நடுவில் நிறுத்தினால் நிறைய இழப்பு ஏற்படும். முகவர் ஒரு பாலிசியைப் பற்றி என்ன சொன்னாலும், அந்த பாலிசி நம் கைக்கு வந்த பின்பு, அதை நாம் பார்த்தால் இதைப் புரிந்து கொள்ள முடியும். உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டால் தெரிந்தவரை அணுகலாம். இது முடியாவிட்டால் நீங்கள் அதை வாங்க வேண்டிய அவசியமில்லை. எண்டோவ்மென்ட் மற்றும் மணி பேக் பாலிசி 20 வருட முடிவில் 6% மேல் நமக்கு வட்டி கிடைக்காது.
பங்குச் சந்தை சார்ந்த முதலீ ட்டுத் திட்டமான யுலிப் 5 வருடம் ஆகியும் போட்ட பணம் இல்லை என்று பங்கு சந்தையை பழி சொல்கிறார்கள். இதில் அவர்களுடைய பிரீமியத்தில் எத்தனை பணம் முதலீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, அது எல்லாமே ஈக்விட்டி சார்ந்ததா அல்லது கடன் சார்ந்த திட்டமா என்பதைப் பொறுத்ததே.
பங்குச் சந்தை மற்றும் மியுச்சுவல் பண்ட்:
இது வர்த்தகம். தினசரி வாங்கியும் விற்றும் ஒவ்வொருவருடைய மனநிலைக்கேற்ப செயல்படு கிறார்கள்.பெரும்பாலும் ஏதாவது ஒரு செய்தியின் அடிப்படையில் அவர்கள் முடிவெடுப்பதால் நிறைய பேர் பணத்தை இழக்கிறார்கள். சிறந்த நிறுவனத்தை நீண்ட கால அடிப்படையில் வாங்குபவர்கள் பணத்தை இழப்பதில்லை. இதற்கு நேரமும், அதைப்பற்றிய புரிதலும் மிக அவசியம்.
ரிஸ்க்: நிறைய பேர் இதில் எளிதில் பணம் பண்ண முடியும் என்ற தவறான கண்ணோட்டத்தில் வருகிறார்கள். மிக விரைவாக பணம் பண்ணுவதற்கும், இழப்பதற்குமான டெரிவேடிவ் வேஸ் முறையைக் கையாள்வது. இதில் உங்களிடம் 5 ரூபாய் இருந்தால் நீங்கள் 100 ரூபாய்க்கு வாங்க முடியும். ஒரு பங்கு குறைந்தால் அது அதே விலை வரும்வரை காத்திருப்பது,
அதே சமயம் அது உயர்ந்தால் உடனே அதை விற்றுவிடுவது. நம்முடைய தேவை போக மீதமுள்ள பணம் மேலும் நீண்ட கால அடிப்படையில் மட்டுமே அது பிறகு தேவைப்படக்கூடியது என்றால் அதில் முதலீடு செய்ய வேண்டும். பலர் தங்களுடைய எல்லா சேமிப்பையும் அதில் போட்டு குறைந்த கால அளவோடு வந்தால் பணத்தைக் கண்டிப்பாக இழக்க வேண்டியிருக்கும். இதில் ரிஸ்க், நம்முடைய அணுகு முறை மற்றும் அதைப் பற்றிய நம்முடைய புரிதல் மிகவும் முக்கியம்.
ரியல் எஸ்டேட்:
மண்ணில் பணத்தைப் போட்டால் எப்போதுமே லாபம்தான். கடந்த 10 வருட வளர்ச்சியினைப் பார்த்து எல்லா பணத்தையும் அதில் முடக்குகிறார்கள். எல்லா வங்கியும் வீடு தேடி வந்து கடன் தருகிறார்கள். இதற்கு ஒரு நிரந்தர விலை கிடையாது.
ரிஸ்க்: கடன் வாங்கி முதலீடு செய்யக் கூடாது என்பது முதலீட்டின் பால பாடம். இங்கு நாம் வங்கியில் கடன் வாங்கி முதலீடு செய்த வீடு, நாம் கட்டக்கூடிய வட்டியைத் தாண்டி பெருக வேண்டும். ஒரு சிந்தனை! ஒரு வங்கி நமக்குக் கடன் கொடுத்து, வெறும் வட்டியை மட்டும் வாங்கிப் பயன் பெறுவதைவிட அந்த வங்கியே அதை வாங்கினால் அவர்களால் குறைந்த அளவுக்கு வாங்க முடியும், ஏன் அவர்கள் செய்வதில்லை என்றால் இன்று நல்ல வளர்ச்சியில் உள்ள ரியல் எஸ்டேட் நாளை அதே மாதிரி வளராவிட்டால் அவர்களுக்கு நஷ்டம் என்று கடன் தருகிறார்கள். இன்று மும்பை, சென்னை, போன்ற பெரு நகரங்களில் 40 மாதத்திற்கான அளவுக்கு வீடு விற்பனைக்கு உள்ளது.
அத்துடன் புதிது புதிதாக பூமி பூஜை போட்ட வண்ணம் இருக்கிறார்கள். நிறைய சப்ளை, குறைந்த டிமான்ட் இருந்தால் விலை குறைய வாய்ப்புகள் அதிகம். கடன் வாங்கி தேவைக்கு மீறி இதில் முதலீடு செய்து கொண்டே இருந்தால் விரைவில் மாட்டிக் கொள்ளவேண்டும்.
சாராம்சம்:
ஒரு முதலீட்டைத் தேர்வு செய்வதற்கு முன்பு கொஞ்சம் நேரம் செலவிட்டு அதனுடைய ரிஸ்க் மற்றும் ரிடர்ன்ஸ் தெரிந்து கொண்டால் யாரையும் பிறகு குறை கூறத் தேவையில்லை. ரிஸ்க்கை புரிந்து கொண்டு முதலீட்டைத் தேர்வு செய்தால் கண்டிப்பாக நம்மால் பணம் செய்ய முடியும்.
padmanaban@fortuneplanners.com
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago