ஆன்லைனில் விந்தணு வர்த்தகம்: சீனாவில் அலிபாபா அறிவிப்புக்கு அமோக வரவேற்பு

By ப்ளூம்பெர்க்

ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் விரல் நுனியில் நுகர்வோர்கள் எதையும் வாங்கி விடலாம். இந்த வர்த்தகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்த செல்லும் வகையில், சீனாவிலிருந்து இயங்கும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலி பாபா புதிய உத்தியை கையில் எடுத்துள்ளது.

விந்தணுக்களை ஆன்லைனில் வர்த்தகம் செய்ய உள்ளதாக ஓர் அறிவிப்பை இந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டது. அறிவிப்பு வந்த சில மணி நேரத்தில் சீன நுகவோர்கள் மற்றும் வர்த்தகர்களின் ஆர்வம் அலிபாபா நிறுவனம் பக்கம் திரும்பியது.

சீனாவில் விந்தணு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நன்கொடையாளர்களுக்கு வழிகாட்டவுமே இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்வதாக அலிபாபா நிறுவனம் தெரிவித்துள்ளது.

விளம்பர பிரச்சாரத்தின் நோக்கம் சீனாவில் விந்து வங்கிகள் விழிப்புணர்வு மற்றும் எளிதாக அவர்களுக்கு சாத்தியமான நன்கொடையாளர்கள் அடைய செய்ய உள்ளது என்று அறிக்கை ஒன்றில் அலிபாபா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அறிவிப்பு வெளியானதிலிருந்து தற்போது வரையில் 22,000-க்கும் அதிகமானோர் விந்தணுக்களை விற்பனை செய்ய முன்பதிவு செய்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெய்ஜிங், ஜியாங்ஸி, ஷாங்ஸி, குவாங்ஷு, குவாங்டோங் ஆகிய மாகாணங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இதற்கென மூன்று நாள் முகாமையும் அலிபாபா நடத்துகிறது. விந்தணுக்களை விற்பனை செய்யும் ஆண்கள் சுமார் 500 டாலரிலிருந்து 800 டாலர் வரை பெறலாம் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சீனாவில் விந்தணுக்கள் விற்பனை சந்தைக்கு புதிதானது அல்ல. ஏற்கெனவே இந்த விற்பனை சீன குறும்பதிவு தளமாக வெய்போவில் நடந்தது. ஆனால் கலாச்சாரம், போதிய விழிப்புணர்வின்மை காரணமாக விற்பனை சூடுபிடிக்கவில்லை. மறுபக்கம், அதிகரித்து வரும் சீன மக்கள் தொகை.

மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை குறிவைத்து மக்களின் மனப்பான்மையை மாற்றும் சிந்தனையில் இந்த ஆன்லைன் வர்த்தக உத்தியை அலிபாபா கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 hours ago

வணிகம்

8 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

மேலும்