பங்குச்சந்தை முதலீட்டாளர் மற்றும் குரு என்று அழைக்கப்படும் வாரன் பபெட்டுடன் மதிய உணவு சாப்பிட ஒவ்வொரு வருடமும் (கடந்த 16 வருடங்களாக) ஏலம் நடந்து வருகிறது. கிளைட் அறக்கட்டளை இந்த ஏலத்தை நடத்துகிறது. இந்த ஏலம் மூலம் கிடைக்கும் தொகை சமூக நலத்திட்டங்களுக்கு செலவிடப் படவுள்ளது.
இந்த வருடம் சீனாவின் ஆன்லைன் விளையாட்டுகளை உருவாக்கும் நிறுவனத்தின் தலைவர் ஒருவர் இந்த ஏலத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் வாரன் பபெட்டுடன் மதிய உணவு சாப்பிட ரூ. 15 கோடி (23,45,678 டாலர்) செலுத்த ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இந்த ஏலத்தை வென்றவர் பெய்ஜிங்கைச் சேர்ந்த டாலியன் ஜீயஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைவர் ஸு யி ஆவார். இபே நிறுவனம் நடத்திய இந்த ஏலம் ஐந்து நாட்களாக நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை முடிந்த ஏலத்தில் 76 பேர் கலந்து கொண்டனர். இதில் அதிகபட்ச தொகையை ஸு யி ஏலம் கேட்டிருந்தார்.
கடந்த 2012-ம் ஆண்டு நடை பெற்ற ஏலத்தில், இப்போது கேட்கப்பட்ட ஏலத் தொகையை விட கூடுதல் தொகைக்கு (34,56,789 டாலர்) ஏலம் எடுக்கப் பட்டது. கிளைட் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் 1.6 கோடி டாலர் அளவுக்கு நலத்திட்ட உதவிகளை செய்கிறது. இது வரை நடந்த 16 ஏலங்களில் 2.02 கோடி டாலர் அளவுக்கு நிதி திரட்டப்பட்டிருக்கிறது.
இந்த ஏலத்தில் வெற்றி பெறுபவர்கள் வாரன் பபெட்டுடன் மதிய உணவு சாப்பிட தன்னுடன் ஏழு நண்பர்களை அழைத்து வரலாம். 84 வயதாகும் வாரன் பபெட் உடன் அவரது வாழ்க்கை, நன்கொடை உள்ளிட்ட எந்த விஷயங்களை பற்றி வேண்டு மானாலும் பேசலாம். ஆனால் அவர் எந்த பங்குகளை வாங்கு கிறார் விற்கிறார் என்பது பற்றி மட்டும் விவாதிக்கக் கூடாது.
இந்த ஏலம் கடந்த 2000-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. வாரன் பபெட் மனைவி சூசன் கிளைட் நிறுவனத்தை பபெட்டுக்கு அறிமுகப்படுத்தினார். முதல் மூன்று ஏலங்களில் 25,000 டால ருக்கு மேல் செல்லவில்லை. அதன் பிறகு ஆன்லைன் மூலம் ஏலம் நடத்தவே இந்த தொகை அதிகரித்தது.
போர்ப்ஸ் பத்திரிகை தகவலின் படி உலக அளவில் வாரன் பபெட் நான்காவது பெரிய பணக்காரர் ஆவர்.
2010 மற்றும் 2011-ம் ஆண்டு களில் டெட் வெஸ்செல்லர் என்பவர் 52.5 லட்சம் டாலர் கொடுத்து ஏலம் எடுத்தார். பின்னாட்களில் வாரன் பபெட்டின் பெர்க்ஷயர் நிறுவனத்தில் போர்ட் போலியோ மேலாளராக பணியில் சேர்ந்தார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago