பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரீஸ் நாட்டுக்கு கடன் அளிப்பது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இத் தகவலை ஐரோப்பிய கமிஷன் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கிரீஸ் மேற்கொள்ள உள்ள நிதி சீர்திருத்த திட்டம் மற்றும் எவ்வளவு நிதியை சர்வதேச நிறுவனங் களிடமிருந்து எதிர்பார்க்கிறது என்பது குறித்து கடன் அளிக்கும் நாடுகளுக்கும் கிரிஸூக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தையில் திட்டவட்டமான முடிவு எடுக்கப் படவில்லை என்று ``ஸின்ஹுவா’’ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று முன்தினம் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.
அடுத்த கூட்டம் லக்ஸம்பர்க்கில் இம்மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ளது. அதில் கிரீஸை மீட்பதற் கான முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
முக்கிய செய்திகள்
வணிகம்
13 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago