பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவதற்காக மீண்டும் வட்டி விகிதத்தை சீன மத்திய வங்கி குறைத்திருக்கிறது. கடந்த நவம்பரில் இருந்து நான்காவது முறையாக வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த இரு வாரங்களாக சீன பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டு வருவதால், முதலீட்டாளர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காக வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
கடனுக்கான (ஒரு வருட) வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்திருக்கிறது. இந்த நடவடிக்கை மூலம் கடனுக்கான வட்டி 4.85 சதவீதமாக இருக்கிறது. அதேபோல டெபாசிட்களுக்கான (ஒரு வருட) வட்டி விகிதமும் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 2 சதவீதமாக உள்ளது.
நவம்பர் 22, மார்ச் 1 மற்றும் மே 11-ம் தேதி வட்டி குறைப்பு செய்யப்பட்டது. நான்காவது முறையாக கடந்த சனிக்கிழமை வட்டி குறைப்பு செய்யபட்டது. இது நேற்று (ஞாயிறு) முதல் அமலுக்கு வருவதாக சீன மத்திய வங்கி அறிவித்தது.
சீனாவின் இரண்டாம் காலாண்டு ஜிடிபி வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் 7 சதவீதத்துக்கும் கீழே வளர்ச்சி இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago