ஜெனீவா ஹெச்எஸ்பிசியில் பதுக்கிய கருப்புப் பணம்: 121 வழக்குகள் பதிவு: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

By ஐஏஎன்எஸ்

கருப்புப் பணம் தொடர்பாக ஹெச்எஸ்பிசி வங்கி வெளியிட்ட பட்டியல் அடிப்படையில் 121 வழக்கு களை வருமான வரித்துறையினர் பதிவு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்களில் 100 வழக்குகள் ஆராயப்பட்டு 121 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜேட்லி தெரிவித்தார். வருமான வரித்துறையினர் நடத்திய ஆய்வில் வெளிநாடுகளில் இவர்கள் பணம் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அமலாக்க இயக்குநரகத்தின் நிறுவன நாள் விழாவில் பங்கேற்ற ஜேட்லி மேலும் கூறியது: அந்நிய வருமானம் மற்றும் சொத்து குவிப்பு தடுப்பு மசோதாவை அடுத்த வாரம் மக்களவையில் தாக்கல் செய்யப் போவதாக குறிப்பிட்டார். வெளிநாடுகளில் உள்ள வங்கி களில் பணம் வைத்துள்ள 350 கணக்குகளின் விவரம் கண்டறியப் பட்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கு களை 60 பேர் வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கருப்புப் பணம் குறித்த விவரங்களை ஆராய சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) கடந்த ஆண்டு மே மாதம் அமைக்கப்பட்டது. ஹெச்எஸ்பிசி வெளியிட்ட 628 கணக்குகள் தொடர்பான விவரத்தை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அது தொடர்பாக விசாரிக்குமாறு எஸ்ஐடி கேட்டுக் கொள்ளப்பட்டது.

வருமான வரித்துறையினர் பதிவு செய்துள்ள வழக்குகள் விவரம் குறித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டு விட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கிடைத்த தகவல், ஆதாரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அதற்கு எத்தகைய தண்டனை அளிக்க வேண்டும் என்ற விவரத்தை மே 12-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் எஸ்ஐடி தாக்கல் செய்யும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் தொடர்பான துல்லியமான விவரம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை. இருப்பினும் 46,600 கோடி டாலர் இருக்கலாம் என்று ஒரு தகவலும், ஒரு லட்சம் கோடி டாலருக்கும் அதிமான தொகை பதுக்கப்பட்டிருக்கலாம் என மற்றொரு தகவலும் தெரிவிக்கின்றன.

நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

தாராளமயமாக்கப்பட்ட வரி விதிப்பு சூழலை நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று ஜேட்லி எச்சரித்தார். உலகம் முழுவதுமே இப்போது வெளிப்படையான நிர்வாக நடைமுறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நிறுவனங்கள் இதை உணர்ந்து முறையற்ற வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என்றார்.

குறைவான வரி விதிக்கப்படுகிறது. இத்தகைய சூழலில் வரி ஏய்ப்பு செய்யக் கூடாது என்பதை ஒவ்வொரு வர்த்தகரும் நினைக்கவேண்டும். சட்டத்துக்கு உள்பட்டு எத்தகைய பரிவர்த்தனையையும் செய்யலாம். தவறுகளை கண்டுபிடிக்க முடியாது என்பதெல்லாம் அந்தக் காலம். தவறு செய்வோர் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படும்.

ஜி20 நாடுகளின் கூட்டமைப்பு நாடுகள் ஒவ்வொரு பண பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன. இது 2017-ம்ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வர உள்ளது.

கருப்புப் பணம் குறித்து கடுமையான சட்டத்தை அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கென உள்நாட்டு சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. ஒவ்வொரு நாடும் பரஸ்பரம் தகவல் பரிமாற்றத்துக்கு ஒப்புக் கொள்ளும்பட்சத்தில் இந்த சட்டம் 2017-ல் செயல்பாட்டுக்கு வரும். அப்போது வெளிநாடுகளில் சட்ட விரோதமாக சொத்து குவிப்பது தண்டனைக்குரியதாகிவிடும். இந்தியாவிலும் இது தொடர்பான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வருகிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்